ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விடவும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்ததாக ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளரான ஹேசில்வுட்டை கடுமையாக சாடியுள்ளார் அந்த அணியின் முன்னாள் வீரரான மிட்செல் ஜான்சன்.
அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஹேசில்வுட் விளையாடி இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல்...
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பெறப்போவது நிதிஷ் குமாரா அல்லது ஷர்துல் தாக்கூரா என்ற புதிய சிக்கல் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளிலுமே ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி, அங்கு கலக்கு கலக்கென்று கலக்கினார். ஆனால், பவுலிங்கில் அவருக்கு அங்கு சரியான சான்ஸ் கிடைக்கவில்லை. இருந்தாலும் இடையில் சில ஓவர்களை...
பதிலடி கொடுத்தது ஆஸி: தென் ஆப்பிரிக்காவை 138 ரன்களுக்கு சுருட்டியது – கம்மின்ஸ் அசத்தல் @ WTC Final
admin - 0
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 138 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து பதிலடி கொடுத்தது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அபாரமாக செயல்பட்டு 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 72,...
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6-ல் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் யு மும்பா டிடி - தபாங் டெல்லி டிடிசி அணிகள் மோதின. 5 ஆட்டங்கள் கொண்ட இந்த டையில் யு மும்பா அணி 10-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
லீக் ஆட்டங்களின் முடிவில் தபாங் டெல்லி டிடிசி அணி 44 புள்ளிகளுடன் முதலிடத்தையும், டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் 44 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும்,...
ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிஃப்ட் கவுர் சாம்ரா 453.1 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
நார்வேயின் ஜீனெட் ஹெக் டியூஸ்டாட் 466.9 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தையும், சுவிட்சர்லாந்தின் எமிலி ஜேகி 464.8 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர்.
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சேலத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. அபிஷேக் தலைமையிலான சேலம் அணி 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி கண்டுள்ளது.
இதன் மூலம் 4 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. திருப்பூர் அணி 2 ஆட்டங்களில் விளையாடி தலா ஒரு வெற்றி, தோல்வியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம்...
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்காக மைதானத்துக்கு வெளியே லட்சகணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் இறந்தனர்.
இதுதொடர்பாக கப்பன் பூங்கா போலீஸார் ஆர்சிபி அணியின் நிர்வாகம், பாராட்டு விழா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட டிஎன்ஏ நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் மீது 6...
போராடினால் மறக்க முடியாத தொடராக இருக்கும்: இந்திய வீரர்கள் மத்தியில் கவுதம் கம்பீர் எழுச்சி உரை
admin - 0
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக இந்தியா ஏ, இந்தியா அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் பெக்கர்ஹாமில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர்...
ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் பாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி மெக்சிகோவின் சாண்டியாகோ கோன்சலஸ், அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியுடன் மோதியது. ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-7 (5), 6-7 (5) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
சவுத்தாம்ப்டனில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 3 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 46 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 84 ரன்களும், ஜேமி ஸ்மித்...








