மலேசியாவில் உள்ள நெகிரி செம்பிலான் பகுதியில் துவாங்கு முஹ்ரிஸ் கோப்பைக்கான பிஎஸ்ஏ சாலஞ்சர்ஸ் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது.
இதன் இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அபய் சிங், 59-வது இடத்தில் உள்ள ஹாங்காங்கின் ஹென்றி லியுங்குடன் மோதினார். இதில் அபய் சிங் 11-7 6-11 3-11 11-5 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
துலீப் டிராபி தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் - வடக்கு மண்டலம் அணிகள் இடையிலான ஆட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த வடக்கு மண்டலம் அணி 59.1 ஓவர்களில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரரான கம்ரான் இக்பால் 182 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசினார். கேப்டன் கன்ஹையா வதவான் 35, ஆயுஷ் டோசேஜா 23, அப்துல்...
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வரும் செப்டம்பர் 24-ம் தேதி டர்பன் நகரில் தொடங்குகிறது.
இந்நிலையில் ரபாடாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தொடையில் காயம் ஏற்பட்டது. அவர், முழு உடற்தகுதியைப் பெறுவதற்கு குறைந்தது நான்கரை வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காகிசோ ரபாடாவுக்கு வலது தொடையில்...
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர கோல்கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸை இங்கிலாந்தின் முன்னணி கிளப் அணியான செல்சி ஒப்பந்தம் செய்துள்ளது.
2022-ம் உலகக் கோப்பை கால்பந்து சாம்பியனான அர்ஜெண்டினா அணியின் 33 வயதாகும் கோல்கீப்பரான எமிலியானோ மார்ட்டினெஸ், ஆஸ்டன் வில்லா கிளப் அணியிலிருந்து விலகி, இங்கிலாந்தின் முன்னணி கிளப்பான செல்சி அணியில் 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார்.
எமிலியானோ மார்ட்டினெஸ் கூறும்போது, “செல்சி அணியில் இணைவது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிக எளிதான...
இந்தியா யு-19 - ஆஸ்திரேலியா யு-19 அணிகள் இடையே 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் வரும் செப்டம்பர் 18-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.
இந்த தொடர்களுக்கான இந்தியா யு-19 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டித் தொடருக்கான அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ராகுல் திராவிட்டின் மகன் அன்வே திராவிட், சேவக்கின் மகன் ஆர்யாவிர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - அமெரிக்காவின் பேபியானோ கருனா மோதி வருகின்றனர். 2 ஆட்டங்கள் கொண்ட கிளாசிக் போட்டியில் முதல் ஆட்டத்தில் பேபியானோ கருனா வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தை 95-வது நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா டிரா செய்தார்.
இதனால் பிரக்ஞானந்தா 3-9 என பின்தங்கி உள்ளார். கிளாசிக்கல் போட்டியை தொடர்ந்து இருவரும் ரேப்பிடு மற்றும் பிளிட்ஸ் போட்டிகளில்...
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதுரை பேந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மதுரை அணி தகுதி சுற்று 1-ல் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை எதிர்கொண்டிருந்தது. இந்த ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்தாகியிருந்தது. எனினும் லீக் போட்டியில் அதிக வெற்றிகளை குவித்ததன் அடிப்படையில் மதுரை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கோவை கிங்ஸ் அணி எலிமினேட்டரில்...
நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் ஆட்டங்கள் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 15-13 புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின் பேபியானோ கருனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் கிளாசிக்கல் பிரிவில் முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார். அடுத்த ஆட்டத்தை டிரா செய்தார். இதனால் கிளாசிக்கல் சுற்றின் முடிவில் 3-9 என்ற புள்ளிகள்...
லார்ட்ஸ் போட்டியின் இடையே ஒளிபரப்பான இம்ரான் கான் மகன்களின் பேட்டி: களமாட மறுத்த பாகிஸ்தான்
admin - 0
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இடையே பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மகன்களில் நேர்காணல் ஒளிபரப்பானது. இதையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களமாட மறுத்ததாக தகவல் வெளியானது.
பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி...
மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு டி 20 காட்சி போட்டி நடத்தப்பட்டது. இதில் டிஎன்சிஏ தலைவர் லெவன் - டிஎன்சிஏ செயலாளர் லெவன் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த டிஎன்சிஏ செயலாளர் லெவன் 20 ஓவா்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நிதி 39 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார்....









