கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - அமெரிக்காவின் பேபியானோ கருனா மோதி வருகின்றனர். 2 ஆட்டங்கள் கொண்ட கிளாசிக் போட்டியில் முதல் ஆட்டத்தில் பேபியானோ கருனா வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தை 95-வது நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா டிரா செய்தார். இதனால் பிரக்ஞானந்தா 3-9 என பின்தங்கி உள்ளார். கிளாசிக்கல் போட்டியை தொடர்ந்து இருவரும் ரேப்பிடு மற்றும் பிளிட்ஸ் போட்டிகளில்...
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதுரை பேந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மதுரை அணி தகுதி சுற்று 1-ல் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை எதிர்கொண்டிருந்தது. இந்த ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்தாகியிருந்தது. எனினும் லீக் போட்டியில் அதிக வெற்றிகளை குவித்ததன் அடிப்படையில் மதுரை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கோவை கிங்ஸ் அணி எலிமினேட்டரில்...
நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் ஆட்டங்கள் அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்​பில் நடை​பெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த இந்​திய கிராண்ட் மாஸ்ட​ரான பிரக்ஞானந்தா 15-13 புள்​ளி​கள் கணக்​கில் அமெரிக்காவின் பேபியானோ கருனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கிளாசிக்கல் பிரிவில் முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார். அடுத்த ஆட்டத்தை டிரா செய்தார். இதனால் கிளாசிக்கல் சுற்றின் முடிவில் 3-9 என்ற புள்ளிகள்...
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இடையே பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மகன்களில் நேர்காணல் ஒளிபரப்பானது. இதையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களமாட மறுத்ததாக தகவல் வெளியானது. பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி...
மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு டி 20 காட்சி போட்டி நடத்தப்பட்டது. இதில் டிஎன்சிஏ தலைவர் லெவன் - டிஎன்சிஏ செயலாளர் லெவன் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டிஎன்சிஏ செயலாளர் லெவன் 20 ஓவா்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நிதி 39 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார்....
ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 30-ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்க சகோதரிகளான செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி மீண்டும் களமிறங்குகிறது. இருமுறை சாம்பியனான இந்த ஜோடிக்கு அமெரிக்க ஓபனில் 'வைல்டு கார்டு' வழங்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு டென்னிஸுக்குத் திரும்பிய செரீனா சமீபத்தில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபனில் வீனஸுடன்...
ஐசிசி டெஸ்ட் கிரிக்​கெட் பந்து வீச்​சாளர்​களுக்​கான தரவரிசை​யில் ஆஸ்​திரேலிய அணி​யின் வேகப்​பந்து வீச்​சாள​ரான மிட்​செல் ஸ்டார்க் முதன்​முறை​யாக முதலிடம் பிடித்​துள்​ளார். வங்​கதேச அணிக்கு எதி​ராக சமீபத்​தில் முடிவடைந்த 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் மிட்​செல் ஸ்டார்க் 12 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தார். இதன் மூலம் இந்​தி​யா​வின் ஜஸ்​பிரீத் பும்​ரா, நியூஸிலாந்​தின் மேட் ஹென்றி ஆகியோரை பின்​னுக்​குத்​தள்ளி 2 இடங்​கள் முன்​னேறி முதலிடத்தை பிடித்​துள்​ளார் மிட்​செல் ஸ்டார்க். 36 வயதான இடதுகை வேகப்​பந்து...
 14-வது தெற்காசிய விளையாட்டு போட்டி வரும் 2027-ம் ஆண்டு ஏப்ரல் 3 முதல் 11 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் ஆகிய மூன்று நகரங்களில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன. இஸ்லாமாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தெற்காசிய ஒலிம்பிக் கவுன்சில் செயற்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2021-ம் ஆண்டு நடைபெற வேண்டிய இப்போட்டிகள் பலமுறை தள்ளிவைக்கப்பட்டன. இறுதியாக...
ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வீரர் சோட்ரானி, போர்ச்சுகலின் ரூயி சோரஸை எதிர்த்து விளையாடினார். இதில் உலகத் தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள சோட்ரானி 13-11,12-14, 11-9, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். உலகத் தரவரிசையில் 54-வது இடத்தில் உள்ள இந்தியாவின் வேலவன் செந்தில்குமார்...
இலங்​கைக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் 63 ரன்​கள் குவித்த இந்​திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், வெளி​நாட்டு மண்​ணில் அதிக ரன்​கள் எடுத்த விக்​கெட் கீப்​பர்​கள் பட்​டியலில் எம்​.எஸ்.தோனி மற்​றும் மார்க் பவுச்​சரின் சாதனை​களை முறியடித்து 3-வது இடத்​துக்கு முன்​னேறி​யுள்​ளார். கொழும்பு சிங்​களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இப்​போட்​டி​யில், முதல் நாள் ஆட்​டத்​தின்​போது காயம் காரண​மாகக் களத்​தில் இருந்து வெளி​யேறிய...