அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். ஜாஸ் பட்லர் 27 பந்துகளில் 52 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 55 ரன்களும் விளாசினர். இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு...
சீனாவின் நிங்க்போ நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 7-வது இடத்தில் உள்ள சீனாவின் ஷி பெங்குடன் மோதினார்.
51 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 30-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி...
பில்லி ஜீன் கிங் கோப்பைக்கான ஆசியா-ஓசியானா குரூப் 1 டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் தாய்லாந்தை எதிர்த்து விளையாடியது.
இதில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் வைஷ்ணவி அட்கர் 1-6, 3-6 என்ற செட் கணக்கில் அஞ்சிசா சாண்டாவிடம் தோல்வி அடைந்தார். இதன் பின்னர் மழை காரணமாக எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. 2-வதாக...
“பும்ராவின் முதல் ஓவரிலேயே சூர்யவன்ஷி விளாசியது எனது அழுத்தத்தைக் குறைத்தது” – யஷஸ்வி ஜெய்ஸ்வால்
admin - 0
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் குவாஹாட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக 11 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது.
15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 14 பந்துகளில், 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்களும், மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 பந்துகளில், 4...
சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவு 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதினார்.
இதில் பிரக்ஞானந்தா 44-வது சுற்றின் போது தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் பிரக்ஞானந்தாவின் கனவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் நபரே இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும்...
வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் கணித்து விட்டனர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி, கடந்த 2024 முதல் டி20 கிரிக்கெட்டில் 61 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரின் நாக்-அவுட் சுற்று முதல் அவரது பந்து...
ஐபிஎல் 2026 தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. மழையினால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி தலா 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 11 ஓவர்கள் மட்டுமே கொண்ட ஆட்டம்...
> ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான டேவிட் வார்னர் சிட்னியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். சிட்னியின் மரூப்ரா பகுதியில் வாகன சோதனை செய்தபோது, அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக வார்னர், மது அருந்தியது கண்டறியப்பட்டது. அடுத்த மாதம் அவர், நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரத்தால் பிஎஸ்எல் தொடரில் அவர், பங்கேற்பதில் எந்த...
சென்னை சூப்பர் கிங்ஸ் - தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்க (டிஎன்எஸ்ஜேஏ) விருதுகள் மற்றும் உதவித்தொகை வழங்கும் விழா நேற்று சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதான வளாகத்தில் நடைபெற்றது.
இதில் வளர்ந்து வரும் 10 இளம் விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்பட்டது. யு-9 செஸ் வீரர் தமிழ் அமுதன், ஆசிய இளையோர் செஸ் சாம்பியன் ஆர்.ஆரண்யா, மன்னார்குடியை சேர்ந்த 15 வயதான கால்பந்து வீராங்கனை எஸ்.தர்ஷினி, சஷாங்க் சரவணக்குமார்...
ஐபிஎல் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியையும், 2-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியையும் வீழ்த்திருந்தது. இதில்...










