தோல்விகளில் இருந்து மீளும் முனைப்பில் பஞ்சாப் – இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் மோதல்
admin - 0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முதல் 7 ஆட்டங்களில் தோல்விகளை சந்திக்காமல் வலம் வந்த பஞ்சாப்...
ஹர்திக் பாண்டியா உடல்நலமின்மை என்று கூறப்படுவதன் காரணமாக நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவ் கேப்டன்சிப் பொறுப்பை ஏற்றார். லக்னோவின் 228 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் 18.4 ஓவர்களில் அனாயசமாகக் கடந்து, 229 ரன்கள் என்று அபார வெற்றி பெற்றது.
நேற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் தோற்று விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது, காரணம் நிகோலஸ் பூரன் 21 பந்துகளில் 63...
ஐபிஎல் 2026 தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 3) நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆரம்பம் முதலே பஞ்சாப் பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ப்ரப்சிம்ரன், கூப்பர் கோனலி ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினர்.
சூர்யான்ஷ் ஷெட்ஜ்...
ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி தொடக்கம் கொடுத்தார். வைபவ் அரோரா வீசிய 2-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். தொடர்ந்து சுனில் நரைன் வீசிய 3-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விரட்டினார்...
தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து லக்னோ அணியை மீட்பாரா ரிஷப் பந்த்? – மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மோதல்
admin - 0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ள மும்பை அணி எஞ்சியுள்ள ஆட்டங்களில்...
“பாலியல் சுரண்டலால் பாதிக்கப்பட்ட 6 பேரில் நானும் அடங்குவேன்” – பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக வினேஷ் போகத் மீண்டும் புகார்
admin - 0
தேசிய மல்யுத்த சம்மேளனத்தில் பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் தலைவராக இருந்தபோது பலமல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், புகார் அளித்தும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கடந்த 2023-ம் ஆண்டு டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
அதன் பின்னர் பிரிஜ் பூஷண் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான கிரிமினல் வழக்கு நிலுவையில்...
டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி சுற்றில் இந்திய ஆடவர் அணி நேற்று முன்தினம் இரவு பிரான்ஸ் அணியுடன் மோதியது.
இதில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்று தொடரை நிறைவு செய்தது. இந்திய அணியில் காயம் காரணமாக லக் ஷயா சென் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஹெச்.எஸ்.பிரனாய் விளையாடினார். முதலில் நடைபெற்ற...
ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்ன? – டாப் 5 ஆட்டங்கள்
admin - 0
ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்ன என்பதை பார்ப்போம். புதன்கிழமை அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 244 ரன்கள் இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிகரமாக எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மும்பை வான்கடேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. 244 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது. குஜராத் அணி, இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்று தலா 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று உள்ளது. கடந்த ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்திய உற்சாகத்தில் அந்த அணி...
“யுவராஜ் சிங்கிடம் பெற்ற பயிற்சியே எனது ஆட்டத்தை மேம்படுத்தியது” – மனம் திறக்கிறார் அபிஷேக் சர்மா
admin - 0
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிடம் பெற்ற பயிற்சியே எனது ஆட்டத்தை மேம்படுத்தியது என்று இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி வீரருமான அபிஷேக் சர்மா தெரிவித்தார்.
ஜியோஸ்டார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கரோனா காலத்தில் யுவராஜ் சிங்குடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டது எனக்கு ஒரு மிகப்பெரிய தருணமாக அமைந்தது. நான் சிறுவயது முதலே அவரை ஒரு முன்மாதிரியாகக் கருதி...









