நாக் அவுட் சுற்று: சடன் டெத்தில் ஜெர்மனியை வெளியேற்றியது பராகுவே | FIFA WC 2026

0
15

பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரின் நாக் அவுட் சுற்​றில் நேற்று அமெரிக்​கா​வின் ஃபாக்​ஸ்​பரோ​வில் உள்ள பாஸ்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 4 முறை சாம்பிய​னான ஜெர்மனி, பராகுவே அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​தி​யது. ஆட்​டத்​தின் முதல் பாதி​யில் ஜெர்​மனி அணி 78 சதவீதம் பந்தை தங்​கள் வசம் வைத்​திருந்த போதி​லும், பராகுவேயின் பலத்த தற்​காப்பு அரணை அவர்​களால் உடைக்க முடிய​வில்​லை.

ஆட்​டத்​தின் 42-வது நிமிடத்​தில் பராகுவே வீரர் மிகு​வல் அல்மிரோன் தனது இடது காலால் அடித்த ஒரு பாஸ் மூலம், ஜெர்மனி​யின் அலெக்​சாண்​டர் பாவ்​லோ​விச் மற்​றும் நதானியேல் பிர​வுன் ஆகிய இரு​வரை​யும் பிரித்து மதி​யாஸ் காலா​சா​விற்கு பந்தைக் கடத்​தி​னார். காலாசா அந்த பந்​தை, ஜெர்மனி அணி​யின் தற்​காப்பு வீரர்​களால் கவனிக்​கப்​ப​டா​மல் தனி​யாக நின்​றிருந்த ஹூலியோ என்​சிசோவுக்கு கிராஸ் செய்​தார்.

என்​சிசோ அதை மிக எளி​தாகத் தலை​யால் முட்டி கோல்​கீப்​பர் மானுவல் நோயரைக் கடந்து கோலாக மாற்​றி​னார். இதனால் பராகுவே அணி முதல் பாதி ஆட்​டத்​தில் 1-0 முன்​னிலை பெற்​றது. இரண்​டாவது பாதி​யில் ஜெர்​மனி பதிலடி கொடுத்​தது. 54-வது நிமிடத்​தில் அந்த அணி​யின் வீரர் புளோரியன் விர்ட்ஸ் கொடுத்த கிராஸை, நட்​சத்​திர வீர​ரான காய் ஹவர்ட்ஸ் தலை​யால் முட்டி கோலாக மாற்​றி​னார்.

இதனால் ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் சமநிலையை எட்டியது. நிர்​ணயிக்​கப்​பட்ட 90 நிமிடங்​கள் வரை​யிலும் இதே நிலையே நீடித்​தது. காயங்​களுக்கு இழப்​பீ​டாக 6 நிமிடங்​களி​லும் இரு அணி​கள் தரப்​பில் மேற்​கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்​லை. இதனால் ஆட்​டம் கூடு​தல் நேரத்​துக்கு சென்றது. 104-வது நிமிடத்​தில் ஜெர்​மனி வீரர் நத்​தானியேல் பிரவுன் கார்​னரில் இருந்து அடித்த பந்தை பாக்ஸ் பகு​திக்​குள் நின்ற ஜோனாதன் தா தலை​யால் முட்டி கோல் வலைக்​குள் திணித்​தார்.

ஆனால், கோல் வலைக்​குள் பந்து செல்​லும் முன் ஜெர்​மனி வீரர் வால்​டெமர் ஆண்​டன், பராகுவே கோல்​கீப்​பரை ஃபவுல் செய்​ததது விஏஆர் சோதனை​யில் தெரிய​வந்​த​தால் அந்த கோல் மறுக்கப்பட்டது. 120 நிமிடங்​களுக்கு பிறகும் ஆட்​டம் 1-1 என சமநிலை​யிலேயே இருந்​தது. இதனால் வெற்​றி​யாளரைத் தீர்​மானிக்க பெனால்டி ஷூட்​-அவுட் முறை கடைபிடிக்​கப்​பட்​டது.

இதில் பராகுவே 4-3 என்ற கோல் கணக்​கில் ஜெர்​மனியை வீழ்த்தி ரவுண்ட் ஆப் 16 சுற்​றுக்கு முன்​னேறியது. பெனால்டி ஷூட் அவுட்டில் முதலில் இரு அணி​களுக்​கும் தலா 5 வாய்ப்​பு​கள் வழங்கப்​பட்​டன. இதில் முதலில் ஜெர்​மனி வீரர் காய் ஹேவர்ட்ஸ் அடித்த பந்தை பராகுவே கோல்​கீப்​பர் ஆர்​லான்டோ கில் அற்புதமாக தடுத்​தார். அதேவேளை​யில் பராகுவே வீரர் மவுரிசியோ தனது வாய்ப்பை கோலாக மாற்​றி​னார். இதனால் பராகுவே 1-0 என முன்​னிலை பெற்​றது.

தொடர்ந்து 2-வது வாய்ப்​பில் ஜெர்​மனி அணி தரப்​பில் ஜோஸ்வா கிம்​மிச்​சும், பராகுவே தரப்​பில் கஸ்​தவோ கோமேஸும் கோல் அடித்​தனர். 3-வது வாய்ப்​பில் ஜெர்​மனி​யின் முசி​யாலா​வும், பராகுவே​யின் மதி​யாஸ் காலார்​ஸா​வும் தங்​களது வாய்ப்பை கோலாக மாற்​றினர். 4-வது வாய்ப்​பில் ஜெர்​மனி அணி​யின் நிக் வால்ட்​மேட் அடித்த பந்தை பராகுவே கோல்​கீப்​பர் ஆர்லான்டோகில் தடுத்​தார். அதேவேளை​யில் பராகுவே அணியின் அன்​டோனியோ சனாப்​ரியா அடித்த பந்து கோல்​கம்​பத்​தின் இடதுபுறம் வெளியே சென்று ஏமாற்​றம் அளித்​தது.

கடைசி வாய்ப்​பில் ஜெர்​மனி அணி​யின் நதி​யம் அமிரி கோல் அடித்​தார். மறு​புறம் பராகுவே வீரர் ஃபேபியன் பால்​புவெனா அடித்த பந்தை ஜெர்​மனி அணி​யின் கோல்​கீப்​ப​ரான மானுவல் நோயர் தடுத்​தார். இதனால் ஆட்​டம் 3-3 என சமநிலையை எட்டியது. இதையடுத்து ‘சடன் டெத்’ முறை கடைபிடிக்​கப்​பட்​டது. இதில் ஒரே ஒரு வாய்ப்பு மட்​டுமே வழங்​கப்​படும்.

சடன் டெத் முறை​யில் ஜெர்​மனி அணி​யின் வீரர் ஜொனாதன் தா, கோல்​கம்​பத்​துக்கு மேலே உயர​மாக அடித்து ஏமாற்​றம் அளித்தார். அதேவேளை​யில் பராகுவே அணி​யின் ஜோஸ் கனாலே தனது வாய்ப்பை கோலாக மாற்றி அசத்​தி​னார். முடி​வில் பராகுவே அணி 4-3 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றுக்கு முன்​னேறியது. ஜெர்​மனி அணி தொடரில் இருந்​து வெளி​யேறியது. ரவுண்ட்​ ஆஃப்​ 16 சுற்​றில்​ பராகு​வே அணி பிரான்​ஸ்​ அல்​லது சுவீடனை எதிர்​கொள்​ளும்.

கால் நூற்றாண்டுக்கு பிறகு..

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இதற்கு முன்னர் ஜெர்மனி – பராகுவே அணி கடந்த 2002-ம் ஆண்டு தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நேருக்கு நேர் மோதி இருந்தன. இதில் ஜெர்மனி 1-0 என்ற கணக்கில் பராகுவேயை வீழ்த்தியிருந்தது. இந்த தோல்விக்கு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு பிறகு, பராகுவே தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

முதன்முறையாக ஷூட் அவுட்டில் தோல்வி

சர்​வ​தேச தொடர்​களில் ஜெர்​மனி அணி தான் எதிர்​கொண்ட ஏழு பெனால்டி ஷூட்​-அவுட்​களில் ஆறில் வெற்றி பெற்​றிருந்​தது. கடந்த 1976-ம் ஆண்டு ஐரோப்​பிய சாம்​பியன்​ஷிப் இறுதிப் போட்டியில் செக்​கோஸ்​லோ​வாக்​கி​யா​விடம் தோல்வியடைந்ததற்கு பிறகு, ஜெர்​மனி அணி தொடர்ச்​சி​யாக ஆறு பெனால்டி ஷூட்​-அவுட்​களில் வென்​றிருந்​தது. இந்​நிலை​யில் தற்​போது முதன்​முறை​யாக பெனால்டி ஷூட் அவுட்​டில் தோல்வியை சந்​தித்து தொடரில் இருந்து வெளி​யேறி உள்​ளது.

தொடரும் சோகம்

கடந்த 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி​யில் அர்​ஜெண்​டி​னாவை 1-0 என்ற கணக்​கில் வீழ்த்தி ஜெர்​மனி தனது நான்​காவது முறை​யாக பட்​டம் வென்றிருந்​தது. அதன் பிறகு முதன்​முறை​யாக நடப்பு தொடரில்​தான் அந்த அணி நாக் அவுட் சுற்​றில் விளை​யாடியது. கடந்த 2 முறையும் ஜெர்​மனி லீக் சுற்​றுடன் வெளி​யேறி இருந்த நிலை​யில் இம்​முறை மிகுந்த எதிர்​பார்ப்பு நில​வியது. ஆனால் இம்​முறை அந்த அணி நாக் அவுட் சுற்றை கடக்க முடி​யாமல் வெளி​யேறி உள்​ளது.

அசத்திய பராகுவே

பிஃபா தரவரிசை​யில் 34-வது இடத்​தில் இருக்​கும் பராகுவே அணி, உலகக் கோப்பை போட்​டி​யில் வெற்றி பெறு​வதற்கு மிகக் குறைந்த வாய்ப்​பு​களைக் கொண்ட பலவீன​மான அணியாகக் கருதப்​பட்​டது. ஆனால், அந்த அணி 12-வது இடத்தில் இருந்த பலம் வாய்ந்ஜெர்​மனியை வீழ்த்தி அனை​வரை​யும் வியக்கவைத்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here