ஆடவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2026ம் ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை நமீபியா மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட யு-19 ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஆர்யன் சர்மா, மிதவேகப் பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜான் ஜேம்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நாடன் கூரே, நிதேஷ்...
ஆஷஸ் தொடரில் அமர்க்களமாக வந்து இறங்கி ஒன்றும் செய்யாமல் உதை மேல் உதை வாங்கி 0-2 என்று தோல்வி கண்டுள்ள இங்கிலாந்து அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
அவர்களின் புகழ்பெற்ற ‘பாஸ்பால்’ கடும் கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் ஆளாகி வருகிறது. கோச் மெக்கல்லம் மீது விமர்சனங்கள் இதுவரை இல்லாமல் இருந்தது கூட இப்போது முடிந்து அவர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஜெஃப்ரி பாய்காட், இங்கிலாந்தின் ஆட்டத்தை, பொறுப்பற்றது,...
டிசம்பர் 10, 2022, இதே தினத்தில் இந்திய அணித்தேர்வுக்குழு இப்போது கண்டுகொள்ளாமல் விடப்பட்ட இஷான் கிஷனுக்கு பொன் தினமாக அமைந்ததாகும். வங்கதேசத்தின் சட்டோகிராம் மைதானத்தில் 126 பந்துகளில் காட்டடி இரட்டைச் சதத்தை எடுத்தார் இஷான் கிஷன். விராட் கோலியும் இவருடன் கைகோர்த்து சதம் ஒன்றை எடுக்க இந்தியா அந்த 3வது ஒருநாள் போட்டியில் 409 ரன்களைக் குவித்தது.
இந்தப் போட்டியில் வங்கதேசத்தை 182 ரன்களுக்குச் சுருட்டியது இந்தியா. ஆனால் தொடரை...
நான் கிரிக்கெட்டை விட வேறெதையும் அதிகம் நேசிக்கவில்லை என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் இடையிலான திருமணம் ரத்து ஆனது. இதை அண்மையில் இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். நீண்ட காலமாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 23-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடைசி நேரத்தில் திருமணம் ரத்து ஆனது. இந்நிலையில்,...
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குணாளன் கமலினி, வைஷ்ணவி சர்மா ஆகியோர் அறிமுக வீராங்கனைகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மகளிர் அணி கிரிக்கெட் அணி அடுத்த வார இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் டிசம்பர் 21 முதல் 30 வரை நடைபெற...
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் கட்டாக்கில் நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சர்வதேச...
14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை மற்றும் மதுரையில் தொடங்கியது. 24 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி, ஸ்பெயின் அணியுடன் மோதுகிறது. லீக் சுற்று மற்றும் நாக் அவுட் சுற்றுகளில்...
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் 2 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி அடிலெய்டு நகரில் தொடங்குகிறது.
இந்நிலையில் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த...
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 240 இந்திய வீரர்கள் உட்பட 350 பேர் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஏலத்துக்கான இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் 240 பேர், வெளிநாட்டு...
ஃபிபா யு-17 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது போர்ச்சுகல் கால்பந்து அணி. இறுதிப் போட்டியில் ஆஸ்திரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வீழ்த்தியது.
20-வது ஃபிபா யு-17 உலகக் கோப்பை தொடர் கத்தார் நாட்டில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 48 அணிகள் இதில் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டிக்கு போர்ச்சுகல் மற்றும் ஆஸ்திரியா அணிகள் முன்னேறின.
இதில் நாக்-அவுட் சுற்றில்...
