அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார். 2 மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற...
புரோ கபடி 11-வது சீசன் போட்டி வரும் அக்டோபர் 18-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் லீக் சுற்றுக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியானது. இதன்படி அக்டோபர் 18-ல் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் யு மும்பா - தபாங் டெல்லி மோதுகின்றன. 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும்...
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. சீனாவின் ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இருந்தது. இந்நிலையில் இந்திய அணி நேற்று தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி...
பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் விளையாட்டில் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி: மாரியப்பன் தங்கவேலுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து மூன்று பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருப்பது என்பது அவரின் திறமை, அசைக்க முடியாத உறுதி மற்றும் நிகரற்ற விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனை நம் தேசத்துக்கு மகத்தான பெருமையைத்...
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு நடைபெற்று வருகிறது. இதில்நேற்று மாலை வரை இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றிருந்தது. பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களை கைப்பற்றுவது இதுவே முதன்முறையாகும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்களை (5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம்) இந்தியா வென்றதே அதிகபட்சமாக இருந்தது. போட்டியின்...
புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - ஹைதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் அணி 313 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 100.4 ஓவர்களில் 327 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரித்திக் ஈஸ்வரன் 140 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அரினா சபலெங்கா, டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர். நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸுடன் மோதினார். 3 மணி நேரம் 26 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஜிவேரேவை 7-6 (7-2),...
27-வது ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் வரும் அக்டோர் 7 முதல் 13-ம் தேதி வரை கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அணியை இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆடவர் அணிக்கு சரத் கமல் கேப்டனாகவும், மகளிர் அணிக்குமணிகா பத்ரா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆடவர் அணியில் மாற்று வீரர்களாக ஸ்நேஹித்எஸ்எஃப்ஆர், ஜீத் சந்திரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் மகளிர் அணியில்மாற்று வீரர்களாக யஷஸ்வினி கோர்படே,...
2025 ஐபிஎல் சீசனுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் திராவிட் மீண்டும் திரும்புகிறார். டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி உலக சாம்பியன் ஆனதோடு திராவிடின் இந்திய அணித் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. ஐபிஎல் 2025-க்கான மெகா ஏலம் தொடர்பாக ராகுல் திராவிடிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வீரர்கள் தக்கவைப்பு தொடர்பாக விவாதித்ததாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன்...
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் 17-வதுபாராலிம்பிக் போட்டியில், பெண்கள் பேட்மிண்டன் ஒன்றையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்ய ஸ்ரீ சிவன் ஆகியோர் வெண்கலமும் வென்று சாதனைப் படைத்துள்ளனர். இவர்களுக்கு முதல்வர், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற...