ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஏற்கெனவே அரை இறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது.
பாகிஸ்தான் அணியானது மலேசியா, கொரியா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களை 2-2...
45-வது செஸ் ஒலிம்பியாட் | இந்திய ஆடவர் அணி மொராக்கோவை வீழ்த்தியது: மகளிர் அணியும் வெற்றியுடன் தொடங்கியது
admin - 0
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் இந்திய ஆடவர் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, மொராக்கோவின் திசிர் மொஹமதுவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 30-வது காய் நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
இதேபோன்று அர்ஜூன் எரிகைசி 40-வது காய் நகர்த்தலின் போது ஜாக் எல்பிலியாவையும், விதித் குஜராத்தி 27-வது காய் நகர்த்தலின்...
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 11-வது சீசன் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை சிட்டி எஃப்சி, மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தர் யுவ பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நடைபெறுகிறது. மோகன் பகான் அணி கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்திருந்தது.
ஐஎஸ்எல் தொடரில் மோகன் பகான் அணி, மும்பை...
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘சி’ - இந்தியா ‘பி’ அணிகள் இடையிலான ஆட்டம் அனந்தபூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ‘பி’ பீல்டிங்கை தேர்வு செய்ததது.
முதலில் பேட் செய்த இந்தியா ‘சி’ அணி முதல் நாள் ஆட்டத்தில் 79 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 126 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 111...
சென்னை நேரு விளையாட்டரங்கில் 4-வது தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டி நடை பெற்றுவருகிறது. இதன் 2-வது நாளான நேற்று மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் உன்னதி ஐயப்பா பந்தய தூரத்தை 13.93 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான சபிதா டாப்போ இலக்கை 13.96 விநாடிகளில் எட்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இலங்கையின்...
2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தென் அமெரிக்க தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு கொலம்பியாவின் பாரன்குயிலா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா - கொலம்பியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி களமிறங்கவில்லை.
கொலம்பியா அணி...
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 243 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஸ்கர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஹைதராபாத் அணி.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்று வந்த இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் 417 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய சத்தீஸ்கர் 181ரன்களுக்கு சுருண்டது. 236 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஹைதராபாத் 70.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது....
4-வது தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியின் மகளிர் உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா 1.80 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். 2-வது இடத்தை இலங்கையின் டி.கே. திமேஷியும், 3-வது இடத்தை வி.பி. நேத்ரா சமாதியும் பிடித்தனர்.
ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சித்தார்த் சவுத்ரி (19.19...
இந்தியாவில் எஸ்ஜி பந்துகளை எதிர்கொள்வது பெரிய சவால்: சொல்கிறார் வங்கதேச பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ்
admin - 0
வங்கதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தொடரின் 2-வது ஆட்டத்தில் வங்கதேச அணியின் பேட்ஸ்மேனான லிட்டன் தாஸ் 138 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அதிலும் வங்கதேச அணி 26 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து நெருக்கடியை சந்தித்த நிலையில் லிட்டன் தாஸ் தனது அபாரமான ஆட்டத்தால் சதம் விளாசி...
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வென்றுள்ளது இலங்கை அணி. பதும் நிசங்கா அபாரமாக பேட் செய்து சதம் விளாசி தனது அணியை வெற்றி பெற செய்தார்.
லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி 263 ரன்கள் எடுத்திருந்தது.62 ரன்கள்...








