சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டியில் அபார பந்து வீச்சின் மூலம் தென் ஆப்பிரிக்காவை 106 ரன்களில் ஆல் அவுட் செய்தது.
ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும்...
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசி அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ். 173 பந்துகளில் 114 ரன்களை எடுத்து அவர் அசத்தினார்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று (புதன்கிழமை) கல்லே நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி...
95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது.
வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியன் ரயில்வே, இந்திய ராணுவம், பாரத் பெட்ரோலியம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
‘பி‘ பிரிவில் கர்நாடகா,...
8-வது தெற்காசிய அட்யா பட்யா சாம்பியன்ஷிப் பூட்டானில் கடந்த செப்டம்பர் 13 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, பூட்டான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மர் ஆகிய 7 நாடுகள் பங்கேற்றன.
இதில் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 29-13,16-10 என்ற செட் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதேவேளையில் மகளிர் பிரிவில் இந்திய அணி 17-14, 15-9 என்ற செட்...
டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு 2-வது இடம் கிடைத்தது. முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் நேற்று முன்தினம் தொடங்கியது.
உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட போட்டியின் இறுதி சுற்று தற்போது பிரஸ்ஸல்ஸில் நடைபெற்று வருகிறது. இறுதிச்சுற்றுக்கு 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றிருந்தனர். 3 ஆயிரம்...
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி யின் 4-வது சுற்றிலும் இந்திய ஆடவர் அணியினர் வெற்றி கண்டனர்.
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி நேற்று நடைபெற்ற 4-வது சுற்றில் செர்பியாவை எதிர் கொண்டது. முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் டி.குகேஷ் 85-வது காய் நகர்த்தலின் போது பிரட்கே அலெக்சாண்டரை வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, செர்பியா வீரர்...
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரை வெல்வோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ நம்பிக்கை தெரிவித்தார்.இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று வங்கதேச அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.முன்னதாக வங்கதேசத்திலிருந்து புறப்படும்போது டாக்காவில் செய்தியாளர்களிடம் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷான்டோ கூறியதாவது: இந்தியாவுக்கு...
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெண்கலப் பதக்கம் பென்றார். பாராலிம்பிக்ஸில் அவர் வென்ற 3-வது பதக்கமாக இது அமைந்தது. 2016-ம்ஆண்டு பாராலிம்பிக்ஸில் தங்கப்பதக்கமும், 2021-ம் ஆண்டு பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கமும் மாரியப்பன் வென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு விமான நிலையத்தில் விளையாட்டு துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள், பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாரியப்பன் கூறும்போது, “தொடர்ந்து மூன்று...
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 21 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
4-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு நாளான நேற்று பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா மொத்தம் 21 தங்கம்,22 வெள்ளி, 5 வெண்கலம் என 48 பதக்கங்களைக் கைப்பற்றி முதலிடத்தைப் பிடித்தது.இலங்கை 9 தங்கம், 9 வெள்ளி,...
இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். விராட் கோலி, லண்டனில் இருந்து நேரடியாக நேற்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா தலைமயில்...








