குவாஹாட்டி: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 சீசன் 11 நாட்கள் ஓய்வுக்கு பிறகு தற்போது மீண்டும் திரும்ப உள்ளது. இதன்படி இன்று (17-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தங்களது கடைசி ஆட்டங்களை டிரா செய்திருந்தன. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி தனது...
முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 366 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முல்தானில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 7, கேப்டன் ஷான் மசூத் 3, சவுத் ஷகீல் 4 ரன்களில்...
துபாய்: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது....
பெங்களூரு: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டது. டாம் லேதம் தலைமை யிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்த தொடரின் முதல்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மழை...
முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்தது. கம்ரன் குலாம் சதம் விளாசினார். முல்தானில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. அப்துல்லா ஷபிக் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் லீச் பந்தில்...
பெங்களூரு: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. டாம் லேதம் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றிருந்தது....
பியூனஸ் அயர்ஸ்: 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டியில் பொலிவியா அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் பதிவு செய்து மெஸ்ஸி அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்று போட்டிக்கான இந்த ஆட்டம் அர்ஜெண்டினாவில் நடைபெற்றது. கணுக்கால் காயம் காரணமாக சமீபகால போட்டிகளில் பங்கேற்காத 37 வயதான நட்சத்திர...
மெல்பர்ன்: இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ம் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. இந்நிலையில் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்...
முல்தான்: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கவுள்ளது. முல்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி கண்டு 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் முல்தான் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது இங்கிலாந்து. அந்த அணியின் ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் முதல் டெஸ்டில் அபாரமாக விளையாடி...
தம்புல்லா: தம்புல்லாவில் நடைபெற்ற முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட்போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தம்புல்லாவில் உள்ள ரண்கிரி தம்புல்லா சர்வதேச மைதானத்தில் முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள்...