பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜெர்மனி ஆடவர் ஹாக்கி அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணி அளவில் டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் மைதானத்தில் நடைபெறுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் அரை இறுதியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில்...
திரிபுராவுக்கு எதிராக அகர்தலாவில் நடைபெறும் ரஞ்சி கோப்பை போட்டியிலிருந்து பிரித்வி ஷாவை நீக்கியுள்ளது மும்பை அணி நிர்வாகம். உடற்தகுதி மற்றும் நடத்தை ஒழுங்கீனம் தொடர்பாக அவர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடிய பிரித்வி ஷா பிரச்சினைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். 24 வயதாகும் பிரித்வி ஷாவின் உடல் எடை வயதுக்கு மீறியதாக இருப்பதாகவும், அணியின்...
டிலாக்ஸ்கலா: மெக்சிகோ நாட்டில் உள்ள டிலாக்ஸ்கலா நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவு இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் தீபிகா குமாரி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன அணியில் இடம் பிடித்திருந்த லி ஜியாமனுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் தீபிகா குமாரி 0-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உலகக்...
எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மிர்பூர் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணியானது வியான் முல்டர், காகிசோ ரபாடா ஆகியோரது வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தது. ஷத்மான் இஸ்லாம் (0), மொமினுல் ஹக் (4),...
நியூஸிலாந்து அணிக்கு எதிராக பெங்களூருவில் முடிவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்ட நிலையில் முகமது சிராஜின் பந்து வீச்சு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. 30 வயதான ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது சிராஜ், இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 80 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இதில் 61...
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதன் பின்னர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகமது ஷமியின் காலில் வீக்கம் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். இதனால்...
பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது. வெற்றி வாய்ப்பு இருந்தபோதும் அதை இந்திய அணியினர் சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் தோல்வி கண்டதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வந்தது....
பெங்களூருவில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளில் நேற்று தொடங்கிய போது ‘கம்பீர்’, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களும், மோர்னி மோர்கெல் உள்ளிட்ட பெருந்தலைகள் இருந்தும் பிட்ச் எப்படி என்பதைப் புரிந்து கொள்ளாமல் கோட்டை விட்டனர். மேலும் 3-ம் நிலையில் விராட் கோலி தானே இறங்கியதாகவும் கூறப்படுகிறது. இதோடு சாதாரண தடுப்பாட்ட உத்தியையும் அடிப்படை டெக்னிக்கும் இல்லாமல் ஒரு மட்டரகமான டி20 அணி...
ஹைதராபாத்: புரோ கபடி லீக் 11-வது சீசனின் முதற்கட்ட போட்டிகள் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரில் புனேரி பல்தான், முன்னாள் சாம்பியன்கள் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யுபி யோதாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுகு டைட்டன்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன. 2-வது கட்ட போட்டிகள்...
முல்தான்: 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 297 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி. முல்தானில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 366 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 53 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 114 ரன்கள் விளாசினார். ஸாக் கிராவ்லி...