பிரிஸ்பன் ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள் குழுவினரை ஐசிசி தலைவர் ஜெய் ஷா நேரில் சந்தித்து பேசினார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் 128 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி இடம் பெற உள்ளது. வரும் 2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் 2032-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்படுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 1-ம் தேதி ஐசிசி-யின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா, நேற்று பிரிஸ்பன் நகரில், பிரிஸ்பன் ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் குழுவினரை நேரில் சந்தித்து பேசினார். இதில் போட்டி ஏற்பாட்டாளர்கள் குழுவின் தலைவார் சிண்டி ஹூக், கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.