சென்னை: 31-வது ஆடவர் தேசிய அட்யா பட்யா போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டியை புதுச்சேரி அட்யா பட்யா சங்கம் மற்றும் அட்யா பட்யா ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து புதுச்சேரி ஆசிர்வதிக்கப்பட்ட மதர் தெரசா மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரா என மொத்தம் 17 மாநிலங்கள் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றன. இந்தப்...
துபாய்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது.
‘குரூப் - ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் 54 ரன்களில் வெற்றி பெற்றது இதன் மூலம் நியூஸிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. அதே பிரிவில் இருந்த இந்திய அணி வெளியேறி உள்ளது.
திங்கட்கிழமை (அக்.14) நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான...
இஸ்லாமாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் வீரர் பாபர் அஸம் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தானை, இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில்...
புதுடெல்லி: ஆசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
கஜகஸ்தானின் அஸ்டானாவில் இந்த போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி ஜோடி 411, 9-11, 8-11 என்ற கணக்கில் ஜப்பானின் மிவாஹரிமோட்டோ, மியூகிஹாரா ஜோடியிடம் தோல்வி கண்டது. மகளிர் அணிப் பிரிவில் மணிகா பத்ரா, அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி ஆகியோரைக் கொண்ட...
ஹைதராபாத்: வங்கதேச அணிக்கெதிரான சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் கேப்டனும், பயிற்சியாளரும் கொடுத்த சுதந்திரத்தால் சாதித்தோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வங்கதேச அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
சஞ்சு சாம்சன் 47...
புதுடெல்லி: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள சூர்மா ஹாக்கி கிளப் அணி சார்பாக இந்திய ஹாக்கி அணியின் கேட்டன் ஹர்மன்பிரீத் சிங் ரூ. 78 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்ஐ) சார்பில் ஐபிஎல் போட்டி பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்ஐஎல்) போட்டி கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடைசியாக 2017-ல் நடைபெற்ற எச்ஐஎல் போட்டியில் கலிங்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர்...
புதுடெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு சிறந்த ஃபீல்டர் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்றது குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறும்போது, “இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் பயிற்சிக் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஃபீல்டிங்கில் என்னுடைய 100 சதவீத திறமையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்கிறேன்” என்றார். இந்தத் தொடரில் 3 விக்கெட்களை வாஷிங்டன்...
மும்பை: நியூஸிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் துணை கேப்டனாக பும்ரா அறிவிக்கப்பட்டுள்ளார். 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 170 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
வரும் 16-ம் தேதி முதல் இந்த தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி 24-ம் தேதி அன்று புனேவில் நடைபெறுகிறது. கடைசி...
முல்தான்: பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் முச்சதம் விளாசியதால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது.
முல்தானில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து, 3-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 492 ரன்கள் குவித்திருந்தது. இந்நிலையில் நேற்று 4-ம் நாள் ஆட்டத்தை...
புதுடெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) முதல் பெண் தலைவரான பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே ஐஓஏ கவுன்சில் உறுப்பினர்கள் விதிகளை மீறி செயல்படுகின்றனர் என்று பி.டி.உஷா குற்றம்சாட்டி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், ஐஓஏ தலைவருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்படுகிறார்...









