வேர்ல்டு டூ பைனல்ஸ் பாட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி தங்களது 2-வது ஆட்டத்தில் மலேசியாவின் பியர்லி டான், தினா முரளிதரன் ஜோடியுடன் மோதியது. 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ட்ரீசா - காயத்ரி ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில்...
பிரிஸ்பன் ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள் குழுவினரை ஐசிசி தலைவர் ஜெய் ஷா நேரில் சந்தித்து பேசினார். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் 128 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி இடம் பெற உள்ளது. வரும் 2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் 2032-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்படுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில்...
சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று சாதனை படைத்தார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ். வெற்றிக்கான நகர்த்தலை முடித்ததும் குகேஷின் கண்களில் கண்ணீர் வடிந்தது. நொடிப்பொழுதில் அவர், போர்டு முன் தலை சாய்ந்தார். இதன் பின்னர் போட்டி நடைபெற்ற அறையில் இருந்து வெளியே வந்த அவர், அங்கு காத்திருந்த தனது தந்தையை ஆரத்தழுவினார். சாம்பியன்...
இந்திய கிரிக்கெட் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெடிங்லியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக எட்ஜ்பஸ்டன்...
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் 898 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். அதே அணியைச் சேர்ந்த ஜோ ரூட் 897 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் (812), இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (811) ஆகியோர் முறையே 3 மற்றும் 4-வது இடங்களில் உள்ளனர். அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 140...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் 12 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் நேற்று 13-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. குகேஷ் வெள்ளை காய்களுடனும், டிங் லிரென் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். இந்த ஆட்டம் 68-வது...
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் அன்று (11-ம் தேதி) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இரவு 7:30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஹைதராபாத் எப்ஃசி அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. சென்னையின் எஃப்சி அணி 11 போட்டிகளில் விளையாடிய 3 வெற்றி, 3 டிரா, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதேசமயம், ஹைதராபாத் எஃப்சி 10 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு...
மகளிருக்கான 20-வது ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் 16 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொரியாவுடன் நேற்று ஜப்பான் பலப்பரீட்சை நடத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜப்பான் 25 – 24 என்ற கணக்கில் கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஜப்பான் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும். அந்த அணி 2004-ம் ஆண்டும் கோப்பையை வென்றிருந்தது. இந்த தொடரில்...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில் 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன. இதையடுத்து...
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற...