சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான டி.குகேஷ். இதன் மூலம் அவர், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். மேலும் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு பிறகு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். உலக...
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் ஆசியாவுக்கு வெளியே கடுமையாக சொதப்பி வருகிறார். ஒன் டவுன் அல்லது 3-ம் நிலையில் இறங்கும் பேட்டர் ஒரு முக்கியமான இணைவுப் புள்ளியாவார். ஒரு அணி 200 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து வரும் பேட்டர் அவுட்டானால், பெரிய சரிவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதே போல் 0/1 என்று இருந்தாலும் ஒன் டவுன் பேட்டர் பொறுப்புடன் இன்னிங்ஸை கட்டமைக்க...
நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 347 ரன்களும், இங்கிலாந்து 143 ரன்களும் எடுத்தன. 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 101.4 ஓவர்களில் 453 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 204 பந்துகளில்,...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 51 ரன்களைச் சேர்த்துள்ளது. மழை குறுக்கிட்டதால் முன்கூட்டிய மூன்றாவது நாள் ஆட்டம் முடித்து வைக்கப்பட்டது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று...
“செஸ் மிகவும் அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் அணுக வேண்டும். இந்த வெற்றியோடு எதுவும் முடிந்துவிடவில்லை. இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது” என்று உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ் கூறியுள்ளார். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று (டிச.16) சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு...
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குகேஷுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று (டிச.16) சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா...
இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். இந்திய அணியின் சார்பில் பும்ரா 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில்...
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனை ஜி.கமலினி ரூ.1.60 கோடிக்கு எடுக்கப்பட்டார். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யு.பி. வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் இந்த போட்டிக்கான மினி ஏலம் நேற்று பெங்களூரு நகரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை ஜி. கமலினியை...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 14-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் உள்ள ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் கடந்த நவம்பர் 25-ம் தேதி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின்...
பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 21-ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை விசாகப்பட்டிணத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: சாய் கிஷோர் (கேப்டன்), நாராயண் ஜெகதீசன், பாபா இந்திரஜித், ஆந்த்ரே சித்தார்த், பூபதி வைஷ்ண குமார், துஷார் ரஹேஜா, ஷாருக்கான், எம்.முகமது அலி, சந்தீப் வாரியர், தீபேஷ், சி.வி.அச்யுத்,...