ஜப்பானில் நடைபெறும் நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் போல் வால்ட்டில் வெண்கல பதக்கம் வென்று தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை பரணிகா இளங்கோவன் அசத்தியுள்ளார். இதன் மூலம் போல் வால்ட்டில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
நடப்பு ஆசிய விளையாட்டின் 7-வது நாளான இன்று (செப்.25) பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தடகள விளையாட்டில் போல் வால்ட் விளையாட்டில்...
இந்தியா மற்றும் பனாமா அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.
இந்த ஆட்டம் பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஆட்டத்தின் முதல் பாதியின் 41-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது.
இந்திய வீரர் ரியல் வில்லியம்ஸ் அந்த கோலை பதிவு செய்தார். ஆகாஷ் மிஸ்ரா கொடுத்த பாஸை பயன்படுத்தி பந்தை வலைக்குள் செலுத்தினார் வில்லியம்ஸ்....
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 7-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுருச்சி சிங், கமல்ஜீத் ஜோடி 484.6 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா கைப்பற்றும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
தென்...
புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய-ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான அதிகரபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா-ஏ பிரமாதமாக பந்து வீசி ஆஸ்திரேலியா-ஏ அணியை 162 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
இந்தியா-ஏ இடது கை ஸ்பின்னர் ஷம்ஸ் முலானி இந்த டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளை இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்துக் கைப்பற்றி அசத்தினார்.
இந்தியப் பிட்ச்களுக்கேயுரிய 4-ம் நாள் ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா-ஏ அணி திணறியதில் ஆச்சரியமில்லை. ஆனால், சுழற்பந்து...
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4X400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் பூவம்மா ராஜூ, விஷால் தென்னரசு, வித்யா ராம்ராஜ், டி.எஸ்.மானு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:14.46 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஹாங்சோவில் கடந்த முறை நடைபெற்ற ஆசிய விளையாட்டிலும் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது....
ஆசிய விளையாட்டு படகு போட்டியில் ஆடவருக்கான டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் சத்னம் சிங், சல்மான் கான் ஜோடி பந்தய தூரத்தை 6:13.25 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டில் ஆடவருக்கான டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
சீனாவின் யி சுடி, யிடே நீ ஜோடி பந்தய தூரத்தை 6:09.37 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப்...
ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் பரினாஸ் தலிவால், அனந்த்ஜீத் சிங் நருகா ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.
ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் பரினாஸ் தலிவால், அனந்த்ஜீத் சிங் நருகா ஜோடி 138 புள்ளிகளை குவித்து 4-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கத்தார் 145 புள்ளிகளுடன் முதலிடமும், தென் கொரியா (143)...
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று வுஷுவில் மகளிருக்கான 60 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நவுரேம் ரோஷிபினா தேவி, சீனாவின் சியாவு ஜாங்குடன் மோதினார்.
இதில் ரோஷிபினா தேவி 0-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். 2 சுற்றுகளிலும் சியாவு ஜாங்குக்கு நடுவர்கள் முழுமையாக 5-0 என முடிவுகளை வழங்கினர்....
10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார் சீமா குமாரி
ஆசிய விளையாட்டு போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தடகள போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் சீமா குமாரி பந்தய தூரத்தை 32:50.05 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
பக்ரைனின் யாவி வின்ஃபிரெட் (32:39.18) முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், ஜப்பானின் தனகா நோஸோமி (32:41.54) 2-வது...
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது நாளான நேற்று மகளிருக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு 198 கிலோ எடையை தூக்கி (ஸ்நாட்ச் 87 கிலோ + கிளீன் அன்ட் ஜெர்க் 111 கிலோ) 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மீராபாய் சானு ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். இதற்கு...









