கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்துப் போட்டியில் இன்று புவனேஸ்வரில் சென்னையின் எப்சி, மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதவுள்ளன. இதற்கான சென்னையின் எப்சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம்: கோல்கீப்பர்கள்: முகமது நவாஸ், சமிக் மித்ரா, மல்ஹர் உமேஷ் மோஹல்.டிபன்டர்கள்: ரியான் எட்வர்ட்ஸ், பிசி லால்தின்புயா, விக்னேஷ் தட்சிணாமூர்த்தி, அங்கித் முகமர்ஜி, மந்தர்ராவ் தேசா, பிரீத்தம் கோடல், எட்வின் சிட்னி வன்ஸ்பால். மிட்ஃபீல்டர்கள்: ஜிதேந்திர சிங், லால்ரின்லியானா நாம்டே, ஜிதேஸ்வர் சிங்,...
நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக இரவு 9.45க்கு தொடங்கியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 14 ஓவர்கள் என்ற அடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியின் ஃபில் சால்ட், விராட் கோலி இருவரும் இன்னிங்க்ஸை தொடங்கினர். இதில் ஃபில் சால்ட்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இறுதிக்கட்ட ஓவர்களில் அசத்தி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகம் மிட்செல் ஸ்டார்க்கிற்கும், தொடக்க ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. ரிஷப் பந்த் தலைமயிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி,...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த மிதவேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்துள்ளது சிஎஸ்கே. கடந்த...
ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆசிய அளவிலான தகுதி சுற்று கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங், ஜப்பானின் அகாரி மிடோகி காவாவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அனஹத் சிங் 11-1, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் ஹாங்காங்கின் ஹெலன்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதிரடி பட்டாளங்கள் நிறைந்த ஹைதராபாத் அணியை 162 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது மும்பை அணியின் பந்து வீச்சு துறை. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 28 பந்துகளில், 40 ரன்கள் சேர்த்தார். டிராவிஸ் ஹெட் 28, இஷான் கிஷன் 2, நித்திஷ் குமார்...
சவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் நகரில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான 6-வது ஆசிய தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 5 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் இந்தியாவின் நித்தின் குப்தா பந்தய தூரத்தை 20:21.51 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் சூ நிங்காவ் (20:21.50) தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சீன தைபே வீரரான ஷெங் கின் லோ (21:37.88) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
 பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் ஐஎஸ்எஸ்ஃஎப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சுருச்சி சிங் 243.6 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற மனு பாகர் 242.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் யாவோ குயான்சுன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர்...
ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் முலான்​பூரில் பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 112 ரன்​கள் இலக்கை விரட்​டிய நடப்பு சாம்​பி​யான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.1 ஓவர்​களில் 95 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து 16 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. அதி​கபட்​ச​மாக ரகு​வன்ஷி 37, கேப்​டன் அஜிங்க்ய ரஹானே 17, ஆந்த்ரே ரஸ்​ஸல் 17 ரன்​கள் சேர்த்​தனர். பஞ்​சாப் அணி தரப்​பில் யுவேந்​திர சாஹல் 4...