அமெரிக்காவின் அயோவா நகரில் யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வளர்ந்து வரும் நட்சத்திர மான இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கனடாவின் பிரையன் யங்குடன் மோதினார். 47 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 21-18, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் ஒற்றையர் இறுதிப்...
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் மிகவும் புகழ் வாய்ந்த விம்பிள்டன் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ, 117-ம் நிலை வீரரான டென்மார்க்கின் எல்மர் மோலரை எதிர்த்து விளையாடினார். இதில் தியாஃபோ 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 9-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ்,...
எஸ்என்ஜே குரூப் 71-வது மாநில அளவிலான ஆடவர், மகளிர் சீனியர் வாலிபால் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற ஆட்டங்களில் திருமயம் அண்ணா அணி 25-21, 25-15 என்ற கணக்கில் ஈரோடு கொங்கு கல்லூரியையும், சென்னை ஐசிஎஃப் 25-14, 25-20 என்ற கணக்கில் மயிலாடுதுறை செவன் ஸ்டார் அணியையும் வீழ்த்தின. மகளிர் பிரிவில் நடைபெற்ற ஆட்டங்களில் எஸ்ஆர்எம் ஸ்பைக்கர்ஸ் 25-15, 25-12 என்ற கணக்கில் உண்ணாமலை...
இதில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. அந்த அணி தரப்பில் ஜோவோ நெவ்ஸ் இரு கோல்களும் (6 மற்றும் 39-வது நிமிடம்), டோமஸ் அவிலெஸ் (சுய கோல், 44-வது நிமிடம்), அக்ரஃப் ஹக்கிமி (45+3-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். லயோனல் மெஸ்ஸி இன்​டர் மியாமி கிளப்​புக்கு மாறு​வதற்கு முன்​னர் பிஎஸ்ஜி...
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மதுரை அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சரத் குமார் 37, அதீக் உர் ரஹ்மான் 30, சரவணன் 17, குர்ஜப்னீத் சிங் 17 ரன்கள் சேர்த்தனர். திருச்சி அணி சார்பில் ஈஸ்வரன், அதிசயராஜ் டேவிட்சன்,...
இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோர், நவம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடர் அக்டோபர் 19-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. டி20 தொடரின் கடைசி ஆட்டம் நவம்பர் 8-ம் தேதி பிரிஸ்பனில் முடிவடைகிறது. போட்டிகள் தொடங்க இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் இந்த 8 ஆட்டங்களுக்கும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...
தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் ஆதரவுடன் விருதுநகர் மாவட்ட கால்பந்து சங்கம் நடத்தும் டி.பி.ராமசாமி பிள்ளை கோப்பைக்கான மாநில ஜூனியர் ஆடவர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சாத்தூரில் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை 8-1 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணியை வீழ்த்தியது. மதுரை அணி தரப்பில் பரத் 3 கோல்களையும் வில்லியம்ஸ், சுஜில் தேவா ஆகியோர் தலா 2 கோல்களையும் சஞ்ஜய் ஒரு கோலையும்...
ஐசிசி தொடரில் ஆஸ்திரேலிய அணி உடனான பலப்பரீட்சை குறித்து இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆஸ்திரேலியா உடன் விளையாடி உள்ளது. இதில் 2023-ல் இரண்டு இறுதிப் போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவியது....
பிரிட்ஜ்டவுன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான நேற்று மேற்கு இந்தியத் தீவுகள் ஓரளவுக்கு மீண்டு முதல் இன்னிங்ஸில் 190 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 10 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பிறகு ஆஸ்திரேலியாவை 2-வது இன்னிங்ஸில் பிரமாதமான பந்து வீச்சில் திணறச் செய்து அந்த அணியை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் என்று முடக்கியுள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் 10 ரன் முன்னிலையைக்...
 “இப்படித்தான் கிரிக்கெட் ஆட வேண்டுமென எம்சிசி கோச்சிங் மேனுவலில் கூட இல்லாத டெக்னிக்கை கொண்டிருப்பவர் ரிஷப் பந்த். அவரது பேட்டிங் பார்க்கவே ரொம்ப த்ரில்லாக இருக்கிறது” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கூறியுள்ளார். ‘ஆண்டர்சன் சச்சின் டிராபி’ டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவி இருந்தாலும் ரிஷப் பந்த் ஆட்டம் எல்லோரது பார்வையையும் பெற்றிருந்தது. இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும்...