Google search engine
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு திடீரென பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தாலும், தொடர்ந்து கடும் வெப்பம் நிலவி வந்தது. லேசான மழையால் சிறிது வெப்பம் தணிந்தாலும் கூட அடுத்த நாளே மீண்டும் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை...
ஆஸ்திரேலியா அருகேயுள்ள தனி நாடான கைலாசாவில் நித்யானந்தா தங்கியிருக்கிறார். கைலாசாவை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நித்யானந்தாவின் பெண் சீடர் தெரிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை விலக்கக் கோரி நித்யானந்தா தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், "மதுரை ஆதீன...
திமுக ஆட்​சியை அகற்​று​வதே எங்களின் முதன்மையான கடமை என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார். சேலத்​தில் நேற்று நடை​பெற்ற பாமக சேலம் ஒருங்​கிணைந்த மாவட்ட பொதுக்​குழுக் கூட்​டத்​தில் அன்​புமணி பேசி​ய​தாவது: சேலம் மாவட்​டம் பாமக கோட்​டை. இங்கு பாமக தனித்து நின்று 2 எம்​எல்​ஏ-க்​களைப் பெற்​றது. கடந்த சில வாரங்​களாக என் மீது வைக்​கப்​பட்ட குற்​றச்​சாட்​டு​கள் 100 சதவீதம் பொய்​யானவை. இதுகுறித்து சில நாட்​களில் விளக்​கம் அளிக்​கிறேன். கட்​சிக்​காக​வும், சமு​தா​யத்​துக்​காக​வும்...
கிண்டி கத்திப்பாராவில், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தட மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் நடைபெறுகிறது. இவற்றில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில் நடைபெறும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று...
என் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பாஜக மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் அவர் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையில் இருந்து கடந்த 10-ம் தேதி உளுந்தூர்பேட்டைக்கு குடும்பத்துடன் காரில் சென்றேன். கடந்த 11-ம் தேதி அதிகாலை விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தோம். வலது திசையில் கார் சென்றபோது, இடது திசையில் சென்ற...
தமிழக முதல்வர் காணொலியில் திறந்துவைத்த 3 நாட்களில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் கடந்த 15, 16-ம் தேதிகளில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்வுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 16-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவிடைமருதூர் வட்டம் சூரியனார்கோவிலில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். இந்தநிலையில், சூரியனார்கோவிலில்...
புதுச்சேரியை ஆன்மிகத் தலமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் கூறினார். மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி அறுபடை வீடுகள் கோயில்களில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நேற்று வழிபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்க் கடவுளான முருகனை தமிழர்கள் அதிகம் வழிபடுகின்றனர். எனது குலதெய்வம் முருகன்தான். வெளிநாடுகளுக்கு சென்றவர்கள்கூட முருகனை வழிபட்டு வருகின்றனர். சிறப்பாக நடைபெற உள்ள முருக...
திருப்பரங்குன்றம் மலை பிரச்சினையை பெரிதாக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்தார். மேலும், மலைக்கு செல்லும் வழியில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும்...
மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மதுபான விற்பனை நடைபெறுகிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். அந்த மனமகிழ் மன்றம் அமையவுள்ள இடம் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் பகுதியாகும். வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனை மற்றும்...
தண்ணீர் லாரி மோதி பள்ளி சிறுமி உயிரிழந்ததன் எதிரொலியாக சென்னைக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை கொளத்தூர், பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி சவுமியா, நேற்று முன்தினம் காலை தாயாருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில், நேரக் கட்டுப்பாடுகளை மீறி...