வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இயங்கிவரும் நில அளவை, மற்றும் நிலவரித் திட்டத் துறையால் இணையவழி ஆவணங்களான ‘அ’ – பதிவேடு, சிட்டா மற்றும் புலப்படம் ஆகியவை இணையவழி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களின் விவரங்களை ஒருங்கிணைத்து, நில உரிமைதாரர்களுக்கு ‘ஒருங்கிணைந்த நில ஆவணம்’ (Integrated Land Record) என்ற சேவையையும், இணையவழியில் ஒரு புல எண்ணில் நடைபெறும் பட்டா மாறுதல் விவரங்களை பொது மக்கள் தெரிந்து...
நெடுஞ்சாலைத் துறை சார்பில், அண்ணா சாலையில் தேனாம் பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் 3.20 கி.மீ.க்கு கட்டப்படும் நான்கு வழித்தட உயர்மட்ட சாலை கட்டுமானப் பணியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னை, அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து நெரிசலில் 3.20 கி.மீ. தூரத்தைக் கடக்க 30 முதல் 45 நிமிடங்கள் ஆகின்றன.
இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், எல்டாம்ஸ்...
நகைப்பட்டறையில் காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சென்னை சவுகார்பேட்டை, சிங்கண்ணன் தெருவில், 4 மாடி கட்டிடத்தில் நகைப்பட்டறை ஒன்று செயல்பட்டு வந்தது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த சுமன் பால் பி சோகித் (35) என்பவர் இந்த நகைப்பட்டறையை நடத்தி வந்தார். இந்த பட்டறையில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இங்கு பழைய,புதிய...
‘உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை கோரி கையெழுத்து இயக்கம்: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு தொடங்கியது
admin - 0
உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய கோரி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயல்பாடு தடுப்பு (உபா) சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள உமர் காலித், ஷார்ஜீல் இமாம் ஆகியோரை விடுதலை செய்ய கோரியும், வழக்குகளை ரத்து செய்ய கோரியும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், கையெழுத்து இயக்கம்...
பட்டியல் மாற்றம் முதல் கச்சத்தீவு வரை தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய மீனவர்களின் கோரிக்கைகள்: மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
admin - 0
சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பட்டியல் மாற்றம் முதல் கச்சத்தீவு வரை இடம்பெற வேண்டிய மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய மீனவர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையை, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினரை சந்தித்து நேற்று அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: மீனவர்களின் நீண்டகால...
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பெண் தொழில் முனைவோர் தயாரித்துள்ள பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
அண்ணா பல்கலைகழக மகளிர் மேம்பாட்டு மையம், சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் பெண் தொழில்முனைவோர் தயாரித்துள்ள பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடத்த உள்ளது.
பல்கலைக்கழகத்தின்...
சென்னையில் முக்கியமான வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக்குமார் கர்க் இன்று (மார்ச் 4) ஆய்வு செய்யவுள்ளார்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் (மேம்பால ரயில்) தடத்தை பரங்கிமலை வரை 5 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கும் வகையில், பறக்கும் ரயில் வழித்தட திட்டப்பணி, 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
ஆனால் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால்...
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி கட்டுமானத்துக்கு தடை: பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வழக்கு
admin - 0
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிமீ சுற்றளவுக்கு எந்த கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்ட தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்தவொரு கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது...
பிப்ரவரியில் கூடுதல் நேரம் பணியாற்றுவதால் முழு ஊதியம் வழங்குக: கவுரவ விரிவுரையாளர்கள் வேண்டுகோள்
admin - 0
போராட்ட நாட்களை பணி நாட்களாக ஈடுசெய்ய பிப்.26 முதல் தினமும் கூடுதலாக 2 முதல் 3 மணி நேரம் வரை பணியாற்றுவதால் பிப்ரவரி மாதத்துக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கவுரவ விரிவுரையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி யுஜிசி தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜி. சிவகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: சம வேலைக்கு சம ஊதியம்,...
ஈரான் – அமெரிக்க போரை நிறுத்த அமைதி முயற்சியை இந்தியா எடுக்க வேண்டும்: கம்யூ., விசிக வலியுறுத்தல்
admin - 0
ஈரான் - அமெரிக்க போரை நிறுத்த பிரிக்ஸ் நாடுகளுடன் சேர்ந்து அமைதிக்கான முயற்சியை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் விசிக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் போரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக தலைவர்...










