தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி நெருங்கி வரு​கிறது. இந்​தச் சூழலில் வாக்​காளர்​களுக்கு அரசி​யல் கட்​சி​யினர்பணப்​பட்​டு​வாடா செய்​வதைத் தடுக்க தேர்​தல் ஆணை​யம் பல்​வேறு தொடர் நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டுள்​ளது. ஆனாலும் சில அரசி​யல் கட்​சிகள், பல்​வேறு நூதன வழிகளில் வாக்​காளர்​களுக்கு பணம் கொடுத்து வாக்கை கவர முயன்று வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது. இதற்​கிடையே, வரு​மானவரித் துறை அதி​காரி​கள் பயன்​படுத்​தும் கார்​கள் மூலம் வாக்​காளர்​களுக்கு கொடுப்​ப​தற்​காக பணம் கடத்​திச் செல்​லப்​படு​வ​தாக தகவல் அறி​யும் உரிமை செயற்​பாட்​டாளர் ஒரு​வர்,...
சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​டணி கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்ஹாசன் தனது பிரச்​சா​ரத்தை சென்​னை​யில் இன்று தொடங்​கு​கிறார். அதன்​படி, சென்​னை​யில் இன்று (17-ம் தேதி) அவர் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் போட்​டி​யிடும் கொளத்​தூர் தொகு​தி, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் போட்​டி​யிடும் சேப்​பாக்​கம்​-​திரு​வல்​லிக்​கேணி தொகுதி மற்​றும் துறை​முகம், திருவிக நகர், வில்​லி​வாக்​கம் ஆகிய தொகு​தி​களில் வாக்கு சேகரிக்​கிறார். நாளை (18-ம் தேதி), தி.நகர், மயி​லாப்​பூர், வேளச்​சேரி ஆகிய...
கருப்​புக் கொடி போராட்​டம் என்ற பெயரில் ஸ்டா​லின் அரசி​யல் நாடகம் நடத்​துகி​றார் என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். கோவை வடக்​கு, கோவை தெற்கு மற்​றும் சிங்​காநல்​லூர் தொகுதி அதி​முக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து சித்​தாபுதூர் வி.கே.கே மேனன் சாலை​யில் நேற்று நடந்த பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பேசி​ய​தாவது: காற்​றில் பரவும் கரோனா வைரஸை விட கொடுமை​யானது கோவை தெற்கு தொகு​தி​யில் இன்​றைக்கு பரவி...
“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்” என பாஜக மாநில துணைத் தலை​வர் குஷ்பு தெரி​வித்​தார். இது தொடர்​பாக நேற்று கோவில்பட்டி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மத்​திய அரசு எந்​தவொரு சட்​டம் கொண்டு வந்​தா​லும் திமுக எதிர்ப்பு தெரிவிக்​கிறது. அவர்​களால் செய்ய முடி​யாததை மத்​திய அரசு செய்து கொண்​டுள்​ளது. தொகுதி மறு​வரையறை சட்​டத்​தால் திமுக-வுக்கு மட்​டும்​தான்...
தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக தலை​வர் நடிகர் விஜய் தமிழகம் முழு​வதும் பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார். அதன்​படி, நேற்று முன்தினம் தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்​பூர் தொகு​தி​யில் சாலை வலம் (ரோடுஷோ) வந்​தார். நந்​தனம் சிஐடி நகரிலிருந்து ரோடு ஷோ தொடங்கிய அவர் தொகுதி வேட்​பாளர் என்​.ஆனந்​துடன் பிரச்​சார வாக​னத்​தில் வலம் வந்​தார். தொடர்ந்து அவர்...
“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான் சொல்​கிறேன். எங்கு பார்த்​தா​லும் பாலியல் வன்​கொடுமை, போதை கலா​சா​ரம் இருக்​கிறது” என முதல்வர் ஸ்டாலின் முன்பு தேமுதிக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா பேசியதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். சேலத்​தில் திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்​து, சேலம் கோட்டை மைதானத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் கலந்து கொண்ட பிரச்​சார பொதுக்​கூட்​டம் நேற்று...
மீஞ்சூர் அருகே இரவில் வீட்டில் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டிய 3 பேர் கும்பலில் ஒருவர் பிடிபட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே வல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, இளைஞர்கள் 3...
வாக்குப்பதிவு மற்​றும் வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது தடையற்ற மின் விநி​யோகத்​துக்கு நடவடிக்கை எடுக்​கு​மாறு அலு​வலர்​களுக்கு மின்​வாரி​யம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்குப்பதிவு ஏப்​.23-ம் தேதி​யும், வாக்கு எண்​ணிக்கை மே 4-ம் தேதி​யும் நடை​பெற உள்​ளது. தேர்​தலை நியாய​மாக​வும், அமை​தி​யாக​வும் நடத்த தேர்​தல் ஆணை​யம் பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. பிரச்​சா​ரங்​கள் விறு​விறுப்​பாக நடை​பெற்று வரும் நிலை​யில், இரவு நேரங்​களில் அரசி​யல் கட்​சி​யினர் செயற்​கை​யாக மின்​தடையை ஏற்​படுத்​தி, வாக்​குக்கு பணம் கொடுக்க முயற்​சிப்​பார்​கள்...
வண்​ணாரப்​பேட்​டை​யில் வாக்​காளர்​களுக்கு ரூ.8 ஆயிரம் இலவச கூப்​பன் விநி​யோகம் செய்​த​தாக திமுகவைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வண்​ணாரப்​பேட்டை வீட்​டு​ வசதி வாரியக் குடி​யிருப்பு பகு​தி​யில் வாக்​காளர்​களுக்கு பரிசுப் பொருள்​கள் விநி​யோகம் செய்​யப்​படு​வ​தாக தகவல் கிடைத்த நிலை​யில், போலீ​ஸாரும், பறக்​கும் படை​யினரும் தீவிர கண்​காணிப்பில் ஈடு​பட்​டனர். அப்​போது சந்​தேகத்​துக்​குரிய வகை​யில் 2 பேர், அங்​குள்ள வீடு​களுக்​குள் சென்று வரு​வது தெரிந்​தது. இதையடுத்து போலீ​ஸார், அவர்​களைப் பிடித்து விசா​ரித்​தனர். அவர்​கள்...
கோடை விடுமுறைக் காலத்தை மாணவர்கள் பயனுள்ளதாக மாற்ற வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாளை (ஏப். 17) முதல் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட உள்ளன. எனவே இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன் விவரம்...