Google search engine
மேம்​படுத்​தப்​பட்ட வசதி​களு​டன் 12 பெட்​டிகளை கொண்ட மெமு ரயில், சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம்தடத்தில் இயங்​கத் தொடங்​கி​யுள்​ளது. சென்​னை​யில் இருந்து அரு​கிலுள்ள நகரங்​களுக்கு பயணி​கள் சென்று திரும்ப வசதி​யாக, மெமு (மெயின்​லைன் எலக்ட்​ரிக் மல்​டிபிள் யூனிட்) ரயில்​கள் பயனுள்​ள​தாக இருக்​கின்​றன. இந்த ரயில்​கள் சென்னை ரயில்வே கோட்​டத்​தில் காட்​பாடி - அரக்​கோணம், சென்னை கடற்​கரை - மேல்​மரு​வத்​தூர், திருத்​தணி - சென்னை சென்ட்​ரல், சென்னை - திருப்​ப​தி, நெல்​லூர் உட்பட...
சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர் அரசுத் தரப்​புச் சாட்​சி​யாக (அப்​ரூவர்) மாற சிபிஐ தரப்​பில் கடும் ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது. தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​குளத்​தைச் சேர்ந்த ஜெய​ராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் 19-ல் போலீ​ஸா​ரால் தாக்​கப்​பட்​ட​தில் உயிர்​இழந்​தனர். உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்படி இந்த வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. இதில் சாத்​தான்​குளம் காவல்​நிலைய ஆய்​வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு​கணேஷ்,...
விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பு: வரும் 26, 27 வார இறுதிவிடு​ முறை என்​ப​தால் இன்​றும், நாளை​யும் (ஜூலை 25, 26) சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு 650 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும். கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர். பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு 110...
 ஆடி அமா​வாசையை முன்​னிட்​டு, சென்​னை​யில் கடற்​கரை, கோயில் தெப்​பக்​குளம் உட்பட பல்​வேறு நீர்​நிலைகளில் ஏராள​மானோர் முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்​தனர். முன்​னோர் வழி​பாட்​டுக்கு உகந்தநாளாக அமா​வாசை கருதப்​படு​கிறது. அதிலும், ஆடி, புரட்​டாசி (மகாள​யம்), தை மாதங்​களில் வரும் அமா​வாசை நாள், கூடு​தல் சிறப்பு வாய்ந்​த​தாக கூறப்​படு​கிறது. ஆடி அமா​வாசை நாளில் புனித நீராடி, முன்​னோருக்கு எள் மற்​றும் அரிசி மாவால் செய்​யப்​பட்ட பிண்​டங்​களை வைத்து தர்ப்​பணம் செய்​வது, அவர்​களின் ஆசிகளைப் பெற்று...
குன்றத்தூர் அருகே தனது 2 குழந்தைகளை கொலை செய்த தாய் மற்றும் ஆண் நண்பருக்கு சாகும் வரை சிறை தண்டனை அளித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலை சம்பவம் குறித்த விவரம் வருமாறு: குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(30). இவர் தனியார் வங்கியில் பணி செய்து வருகிறார். இவருக்கு அபிராமி(25) என்ற மனைவியும் அஜய்(7) என்ற...
2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டதாக திமுக அரசு முரசறைகிறது. ஆனால், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்தத் தொகுதியான காங்கயத்தில் காங்கயம் காளைக்கு சிலை அமைக்கப்படும் என திமுக தலைவராக ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2020 நவம்​பர் 6-ல் திருப்​பூர் வந்த அப்​போதைய முதல்​வர் எடப்​பாடி பழனி​சாமி, “காங்​க​யம் காளைக்கு காங்​க​யம் நகரின் மையப்​பகு​தி​யில் சிலை அமைக்​கப்​படும்” என அறி​வித்​தார்....
ஓரணியில் தமிழ்நாடு என்று சொல்லி ஹைடெக்காக கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சியான திமுக. அதற்கு முன்னதாகவே பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக தலைமை, தான் நினைத்தபடி பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக செய்துமுடிக்கவில்லை என்று கண்டுபிடித்து அந்த மாவட்டச் செயலாளர்களை ட்ரில் வாங்கியது. தற்போது அடுத்த அதிரடியாக பூத் கமிட்டிகளின் செயல்பாடுகளை டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலமாக...
நுங்​கம்​பாக்​கம் பகு​தி​யில் மெட்ரோ ரயில் பணி​யில் ஈடு​பட்​டிருந்த ராட்சத கிரேனில் திடீரென பழுது ஏற்​பட்​டது. இதனால், உத்​தமர் காந்தி சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டு, வாகன ஓட்​டிகள் அவதிப்​பட்​டனர். சென்​னை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் 116.1 கி.மீ. தொலை​வுக்கு 3 வழித்​தடங்​களில் பணி​கள் நடை​பெறுகின்​றன. இவற்​றில், மாதவரம் - சிறுசேரி சிப்​காட் வரையி​லான 45.4 கி.மீ. தொலைவு வரை 3-வது வழித்​தடத்​தில் மெட்ரோ ரயில் பணி​கள்...
பெண்​களின் பாது​காப்​பில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்​டும் என்று பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​தார். பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை நேற்று காஞ்​சிபுரம் காமாட்சி அம்​மன் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தார். அவரை மூத்த அர்ச்​சகர் நடராஜ சாஸ்​திரி வரவேற்​றார். அம்​மனை தரிசித்​து​விட்டு கோயிலுக்கு வெளிய வந்த அண்​ணா​மலை செய்​தி​யாளர்​களை சந்​தித்து பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின் துணை குடியரசுத் தலை​வர் ஜெகதீப் தன்​கர் ராஜி​னாமா செய்​துள்​ளார்....
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 16,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 31,000 கனஅடியாகவும், இரவு 18,500 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று 18,000 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு நேற்று மாலை விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம்...