விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு: ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தது போன்ற தவறை மீண்டும் செய்கிறதா காங்கிரஸ் ?
admin - 0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைப் பெற்றுள்ள நடிகர் விஜய்யின் தவெக கட்சி, ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை. அதனால் முதல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு இதேபோன்ற நிலை புதிதாக தொடங்கிய ஆம் ஆத்மி கட்சிக்கும் ஏற்பட்டது. அப்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்தது. அதன்பின், காங்கிரஸின் ஆதரவுடன் அமைந்த கேஜ்ரிவால் அரசு பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தது.
இப்போது...
சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 70 எம்எல்ஏக்கள், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தங்க வைக்கப்பட்டுள்ளதால், அங்கு பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 108...
கன்னியாகுமரி, தென்காசி, விழுப்புரம் உட்பட 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாத தவெக
admin - 0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக பல மாவட்டங்களில் அமோக வெற்றிபெற்றாலும் கன்னியாகுமரி, தென்காசி, விழுப்புரம் உட்பட 8 மாவட்டங்களில் ஓர் இடத்தில்கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களை வென்றுள்ளது. திமுகவின் கோட்டை எனக் கருதப்படும் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது.
அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர்...
சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ள திமுக, அதிமுகவுக்கு இணையாக தவெக வழக்கறிஞர் அணியை பலப்படுத்த விஜய் திட்டம்
admin - 0
திமுக, அதிமுகவுக்கு இணையாக தவெகவின் வழக்கறிஞர் அணியை பலப்படுத்த விஜய் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுகவுக்கு பெரும் பலமாக இருப்பது வழக்கறிஞர் அணிகள்.
தேர்தல் நேரத்தில் வேட்புமனு உள்ளிட்ட ஆவணங்களை முறையாக தயாரித்துக் கொடுத்தல், கட்சி அளவிலும், அரசுக்கு ஆதரவான, எதிரான வழக்குகளில் உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதிட்டு வெற்றியைத் தேடித் தருதல், எம்.பி....
பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி செயலாற்றும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
தமிழகம் எனும் தாய் நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும்...
தவெக 35%, திமுக 24%, அதிமுக 21% – தமிழகத்தில் கட்சிகளின் வாக்கு வங்கியில் ஏற்றமும், சறுக்கலும்
admin - 0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்.23-ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து வரலாறு படைத்துள்ளது.
தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் அதன் சதவீதம் குறித்த முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தத் தேர்தலில் தவெக போட்டியிட்ட 233 இடங்களில் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது.
மொத்தமாக...
தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது ஆதரவைப் பெற விஜய் திட்டமிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்களைப் பெறாததால், தமிழகத்தில் தற்போது ‘தொங்கு சட்டப்பேரவை’ அமையும் சூழல் உருவாகியுள்ளது.
ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால், கட்சிகளிடம்...
விஜய் அழைத்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்குமா? – கிரிஷ் சோடங்கர், பெ.சண்முகம், மு.வீரபாண்டியன் பதில்v
admin - 0
விஜய் அழைத்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்குமா? என்ற கேள்விக்கு கிரிஷ் சோடங்கர், பெ.சண்முகம், மு.வீரபாண்டியன் ஆகியோர் பதிலளித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அக்கட்சி பெறாததால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு அளிக்குமாறு தவெக நாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஆட்சியில் சேர தவெக தலைவர் விஜய் அழைப்பு விடுத்தால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு...
1967, 77 தேர்தலைப் போல புரட்சிக்கு வழிவகுத்த 2026 தேர்தல்: முன்பே கணித்த தவெக தலைவர் விஜய்
admin - 0
தமிழகத்தில் 1967, 77 தேர்தலைப்போல 2026 தேர்தலும் புரட்சிக்கு வழிவகுத்துள்ளது. இதை, தவெக தலைவர் முன்பே கணித்து கூறியது குறிப்பிடத்தக்கது. தவெகவின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய தவெக தலைவர் விஜய், “1967, 1977 சட்டப்பேரவை தேர்தல்களைப் போல 2026 சட்டப்பேரவை தேர்தலும் தமிழகத்தில் புரட்சிக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்தார். இவர் கணித்தது போல், இன்றைய...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியுள்ளதாவது:
சூர்யா: மக்களின் அன்பையும், ஆதரவையும் பெறுவது ஒரு வரம். நண்பர் விஜய் மீது தமிழகம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கவிருக்கும் அவருக்கு எனது வாழ்த்துகள்.
சிவகார்த்திகேயன்: தனது முதல் தேர்தல் களத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றியை பெற்ற விஜய் சாருக்கு பாராட்டுகள். நீங்கள் திரையுலகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
ரவி...









