ஆசிரியர் பயிற்றுநர் காலி இடங்களை நிரப்ப வேண்டும்: 2024-ல் தேர்வானவர்கள் முதல்வருக்கு கோரிக்கை
admin - 0
கடந்த 2024-ம் ஆண்டு டிஆர்பி தேர்வில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற ஆசிரியர்கள் முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர் (பிஆர்டி) காலி பணியிடங்களை நிரப்ப கடந்த 2024-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 2,850 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணியிலும் சேர்ந்துவிட்டனர்.
ஆனால், இதே தேர்வில் தேர்ச்சி...
“மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், அவரது பேச்சுக்கு மாற்று கட்சியினர் மற்றும் அரசியல் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில் தவெக பொதுச்...
தமிழகம் வந்துவிட்டு மேகேதாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் துரோகிகள்: ராகுல் மீது திமுக மறைமுக தாக்குதல்
admin - 0
மாமல்லபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவை யார் ஆதரித்தாலும், தமிழகத்துக்கு துரோகம் செய்கிறவர்கள்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் எக்ஸ் வலைதளப்பதிவில், “நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள். தமிழகத்துக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து...
குமரி முதல் தூத்துக்குடி வரையிலான கடற்கரையை தூய்மையாக்கும் பணியை தொடங்கி வைத்தார் அண்ணாமலை
admin - 0
எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி இளைஞர்கள் பொது சேவைக்கு வர வேண்டும் என வீ த லீடர்ஸ் இயக்க முதன்மைச் சேவகர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை 175 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை வீ த லீடர்ஸ் இயக்கம் நேற்று தொடங்கியது. கன்னியாகுமரியில் அண்ணாமலை தொடங்கி வைத்து, கடற்கரையில் தூய்மைப் பணி மேற்கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தின் மொத்த கடற்கரை நீளம் 1,075...
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவருக்கு புகழஞ்சலி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத்...
‘கர்நாடகாவில் உள்ள அரசாங்கம் அங்குள்ள அரசியல் கட்சிகளையும், விவசாயிகளையும் மதிக்கிறது. இங்கிருக்கும் அரசாங்கம் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, ‘விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணக்குகின்றேன். காவிரி விவகாரத்தில் இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்றே தெரியவில்லை.
காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக்கட்சிகள் மற்றும்...
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரைப்பாக்கம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறி, கிராம மக்கள் (திங்கள் கிழமை) இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரைப்பாக்கம் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் 7 தெருக்களுக்கும் வழக்கமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக குடிநீர்...
‘கர்நாடகா மேகேதாட்டு அணை கட்டக்கூடாது’ என ராகுல் கூறினால் பாஜக கூட்டணியில் இருந்து விலகத் தயார்: அன்புமணி
admin - 0
‘கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறிவிட்டால் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகத் தயார்’ என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் கர்நாடகா சென்று, கர்நாடக முதல்வரைச் சந்தித்து பேசிவிட்டு மேகேதாட்டு அணை கட்டும் பகுதியைப்பார்வையிட்டால் அது தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும்.
கர்நாடகா அணையே கட்டக்கூடாது என்று நாம் கூறிக்கொண்டிருக்கும்போது, அங்கு...
சென்னையில் இன்று நடைபெறும் விழாவில் 665 போலீஸாருக்கும் நேரடியாக விருது வழங்குவாரா முதல்வர்?
admin - 0
சென்னையில் இன்று மாலை நடைபெறும் விழாவில் 665 போலீஸாருக்கும் முதல்வர் விஜய் தனது கைகளாலேயே பதக்கங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை காவல் துறையினரிடம் வலுத்துள்ளது.
தமிழகத்தில் சிறப்பாகப் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள், காவலர்கள், சீருடைப் பணியாளர்களை கவுரவித்து ஆண்டுதோறும் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் காவல் பதக்கம், முதல்வர் காவல் பதக்கம், மத்திய...
சென்னையில் உலகளாவிய திறன் மையங்கள், உற்பத்தி திட்டம்: முதல்வர் விஜய் முன்னிலையில் 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
admin - 0
தமிழகத்தில் உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி திட்டம் மற்றும் தமிழகத்தின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை நிறுவ முன்னணி நிறுவனங்களுடன் முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘சப்’ நிறுவனம், தனது உலகளாவிய திறன் மையம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ‘நார்டெக்ஸ்’ நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை தமிழகத்தில்...










