Google search engine
தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜாகிர் உசேன் நேற்று செய்தியாளர்களி டம் கூறியதாவது: ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. தனியார் செயலிகள் மூலம் வாகனங்களை இயக்கும் நிறுவனங்களை முறைப்படுத்த அக்ரிகேட்டர் சட்டம் அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. பல பள்ளிகளில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை...
திருச்சி யானைகள் முகாமில் பராமரிக்​கப்​பட்டு வந்த காஞ்​சிபுரம் காமாட்சி அம்​மன் கோயிலுக்​குச் சொந்​த​மான 3 பெண் யானைகள், நீதி​மன்ற உத்​தர​வுப்​படி மீண்​டும் காஞ்​சிபுரம் கொண்டு வரப்​பட்டு சங்கர மடத்​தின் நிர்​வாகி​களிடம் நேற்று முன்​தினம் ஒப்​படைக்​கப்​பட்​டன. அந்த யானை​களுக்கு பூஜைகள் நடை​பெற்​றன. காஞ்​சிபுரம் காமாட்சி அம்​மன் கோயிலுக்கு சொந்​த​மான சந்​தி​யா, இந்​து, ஜெயந்தி ஆகிய 3 பெண் யானைகள் சங்கர மடத்​தால் பராமரிக்​கப்​பட்டு வந்​தன. இவை கடந்த 2019-ம் ஆண்டு மருத்​து​வச்...
ஜாக்​டோ-ஜியோ கூட்​டமைப்பு சார்​பில் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில், தமிழக முதல்​வருக்​கு பிப்.8-ம் தேதி நன்றி அறிவிப்பு விழா நடை​பெறுகிறது. ஜாக்​டோ-ஜியோ மாநில ஒருங்​கிணைப்​பாளர்​கள் மற்​றும் உயர்​நிலைக்​குழு உறுப்​பினர்​கள் ஆலோ​சனை கூட்​டம் வெ.சோமசுந்​தரம், இரா.​தாஸ், எஸ்​.​ஞான​சேகரன் ஆகியோரின் தலை​மை​யில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. அரசு ஊழியர்​களுக்கு உத்​தர​வாதப்​படுத்​தப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை (TAPS) தமிழக முதல்​வர் ஜன. 3-ம் தேதி அறி​வித்​தைத் தொடர்ந்​து, சென்னை ஒய்​எம்​சிஏ விளை​யாட்டு மைதானத்​தில் பிப்​.8-ம் தேதி...
கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.417.07 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2024-25-ம் ஆண்டுக்கான சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையில், தென் சென்னை பகுதிகளில் குழந்தைகளுக்கான உயர்தர சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகளை வழங்க சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு...
நாடுமுழுவதும் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் பிப்.15-ம் தேதி வரை நடக்கிறது. இதுதொடர்பாக டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவ மனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகள் தலைவர் மருத்துவர் சவுந்தரி கூறியதாவது: உலகம் முழுவம் 9 கோடி பேர் கண் நீர் அழுத்த நோயால் (குளுக்கோமா) பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 1.30 கோடி பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். விழியின் முன் பகுதியில் உள்ள அறையில் (ஏன்டீரியர் சேம்பர்) சுரக்கும்...
கச்​சத்​தீவு பகுதி மீதான பாரம்​பரிய உரிமையை நிலை​நாட்ட வலி​யுறுத்​தி, குடியரசு தினத்தன்று கச்​சத்​தீவுக்​குச் சென்று இந்​திய தேசி​யக் கொடியை ஏற்​று​வோம் என்று காவிப் புலிப்​படை கட்சி அறிவித்திருந்தது. இதன்​படி, கட்​சித் தலை​வர் புல​வஞ்சி போஸ் தலை​மை​யில் ஏராள​மானோர் தஞ்​சாவூரிலிருந்து ராமேசுவரத்​துக்கு நேற்று வந்​தனர். அவர்​கள் நேற்று மதி​யம் ராம​நாத சுவாமி கோயி​லி்ல் இருந்து ஊர்​வல​மாகப் புறப்​பட்டு அக்னி தீர்த்த கடற்​கரைக்​குச் சென்​ற​போது, அங்கு பாது​காப்​புக்கு நின்​றிருந்த போலீ​ஸார் அவர்​களைத் தடுத்து நிறுத்​தினர். பின்​னர்,...
சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் 77-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.எம்.சுப்ரமணியம், அனிதா சுமந்த் உள்ளிட்ட...
வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் வணிக ரீதி​யான முழு உற்​பத்தி தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக மின் வாரி​யம் தெரி​வித்​துள்​ளது. வடசென்னை அனல் மின் நிலை​யம் 3-ல் 800 மெகா​வாட் அளவுக்கு மின்​னுற்​பத்தி செய்ய முடி​யும். இந்த அனல் மின் நிலை​யத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கி வைத்​தார். இதையடுத்து அனல் மின் நிலை​யத்​தில் சோதனை ஓட்​டம் உள்​ளிட்ட பணி​கள் தொடர்ச்​சி​யாக மேற்​கொள்​ளப்​பட்​டன. இந்​நிலை​யில் கடந்த ஆண்டு இறு​தி​யில் வடசென்னை...
மொரீஷியஸில் உள்ள முரு​கன் கோயில்​களில் நடை​பெறும் தைப்பூச விழா​வில் தமிழ் பக்​திப் பாடல்​களை பாட 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அனுப்​பி​யுள்​ளது. ஆப்​பிரிக்க கண்​டத்​தில் உள்ள குட்டி தீவு மொரீஷியஸ். இதன் மக்​கள்​தொகை 12 லட்​சம். இந்​திய வம்​சாவளி​யினர் இங்கு அதி​க​மாக உள்​ளனர். குறிப்​பாக தமிழர்​கள் அதி​க​மாக வசிக்​கின்​றனர். அங்கு கரும்​புத் தோட்​டங்​கள் மற்​றும் கட்​டு​மானப் பணி​களில் வலு​வான அடித்​தளமிட்ட இவர்​கள், இந்து சமய அடை​யாளத்​துடன் தைப்பூச விழாக்​களை​யும்,...
மாபெரும் தமிழ்க் கனவு திட்​டத்​தின்​கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்​சிப் பட்​டறை நடத்​து​வதற்​காக ரூ.1.08 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து உயர்​கல்​வித் துறைச் செயலர் பொ.சங்​கர் வெளி​யிட்ட அரசாணை விவரம்: தமிழ் மண்​ணின் சிறப்​பு​களை இளைய தலை​முறை​யினருக்கு கொண்டு செல்ல வேண்​டி​யுள்​ளது. இதற்​காக தமிழர் மரபும்-நாகரி​க​மும், தமிழகத்​தில் சமூகநீ​தி, பெண்​கள் மேம்​பாடு, சமூகப் பொருளா​தார முன்​னேற்​றம் உள்​ளிட்ட தலைப்​பு​களில் ஆளு​மை​களைக் கொண்டு அமர்​வு​களை நடத்​தலாம். அதில் மொழிப்​பற்​றாளர்​கள், கல்​வி​யாளர்​கள், ஆய்​வறிஞர்​கள் உள்​ளிட்​டோரை கொண்டு மாபெரும்...