சென்னை குடிநீர் வாரியம் சார்பில் துறைமுகம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பிராட்வே, டேவிட்சன் தெருவில் ரூ.27.50 கோடியில் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று கீழ்நிலைநீர்த்தேக்கத் தொட்டியின் செயல்பாட்டைத் தொடங்கிவைத்தனர்.
இத்திட்டத்தின்...
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட உள்ளதாக மனிதநேய ஜனநாயகக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மனிதநேய ஜனநாயகக் கட்சியின் 10-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில், சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதுடன், 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியினரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு பெயரில் நுழைவுவாயில்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பயன்பாடற்ற 34 கிலோ நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்ற வங்கியிடம் ஒப்படைப்பு
admin - 0
இந்து சமய அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்களிடமிருந்து காணிக்கையாகப் பெறப்பட்டு பயன்படுத்த இயலாத பொன் இனங்களில் கல், அரக்கு, அழுக்குநீக்கப்பட்டு, மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்கஉருக்காலையில் உருக்கி, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, ரவிச்சந்திர பாபு, செல்வி மாலா ஆகியோரின் கண்காணிப்பில்...
சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
admin - 0
சென்னை உயர் நீதிமன்றத்தி்ன் புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மார்ச் 5-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறவுள்ளார்.
அதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தற்போது கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 14 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீனில் இருந்த அஞ்சலை, பொற்கொடி தவிர்த்து எஞ்சிய அஸ்வத்தாமன், பிரதீப், ஹரிஹரன், சதீஷ்குமார், சிவா, புதூர் அப்பு,...
ஆக்கிரமிப்புகளை அகற்றும் வழக்கில் தாம்பரம், விருத்தாசலம் வட்டாட்சியர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம்
admin - 0
தாம்பரம் தாலுகாவில் உள்ள கோவிலாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலையில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை எனக்கூறி திருநின்றவூரைச் சேர்ந்த சி.சதீஷ் என்பவர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலரான ஜி.பிரகாஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த டி.சினேகா, பரங்கிமலை பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன், தாம்பரம் தாலுகா வட்டாட்சியர் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு...
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
திமுகவில் ஓபிஎஸ் இணைந்தபோது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில்...
‘நீங்கள் விதைத்த விதைகள் இன்னும் பல நல்லகண்ணுக்களாக மலரும்’ – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் புகழஞ்சலி
admin - 0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு நேற்று முன்தினம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“சேவையையே தனது வாழ்நாள் கீதமாகக் கொண்டு வாழ்ந்த ஓர் உன்னதமான ஆன்மாவான தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு, மிகுந்த துயரத்துடன் நாம் விடை கொடுக்கிறோம். ஒன்பது தசாப்தங்களாகத் தன்னலமற்ற...
விசில் கட்சியில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பிப்ரவரி 23-ம் தேதி அறிவிப்பதாக இருந்தார்களாம். ஆனால், கதர் பார்ட்டிகள் 26-ம் தேதி வரை அவகாசம் கேட்டதால் அதை ஒத்திவைத்தார்களாம்.
கதர் தலைகளின் பதிலைப் பொறுத்து இந்த மாத இறுதிக்குள் விசில் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்கிறார்கள். முதல்கட்டமாக, முக்கிய தலைகள் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் யோசனையில் இருக்கிறார்களாம்.
அதன்படி, விசில் நாயகர் தலைநகரில் இருக்கும் ‘பூர்’ தொகுதி...
“அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; பழனிசாமிக்கு வெற்றியே கிடையாது” – திமுகவில் இணைந்த ஓபிஎஸ் கருத்து
admin - 0
“அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சர்வாதிகாரமாக நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
திமுகவில் இணைந்தபின்னர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், “அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில் மன மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி...









