நல்லகண்ணுவின் மறைவு நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பு என அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: முதுபெரும் அரசியல் தலைவர் இரா.நல்லகண்ணுவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எளிமை மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு உணர்வுடன் பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். அவரது மறைவு ஆழமாக உணரப்படும் ஒரு...
சென்னை – சிங்கப்பூர் விமானத்தில் ஏசி பழுது: ஓடுபாதையில் விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் பயணிகள் தவிப்பு
admin - 0
சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் ஏசி இயங்காத நிலையில், ஓடுபாதையில் விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் 4 மணி நேரமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 198 பயணிகளுடன் நேற்று காலை 7.20 மணிக்கு புறப்படத் தயாரானது. விமானம் ஓடுபாதையில் ஓடுவதற்கு தயாரானபோது, விமானத்துக்குள் ஏசி வேலை செய்யாததால், பயணிகள் கூச்சல் போட்டனர்.
இதையடுத்து, விமானத்தில் கோளாறு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு...
‘தமிழகம் முழுவதும் ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாத காலத்துக்குள் அகற்ற வேண்டும்’ என அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலரான ஏ.ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குன்றத்தில் உள்ள செங்கோல் ஆதீன மடத்துக்குச் சொந்தமான ஏராளமான சொத்துகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில்...
தேர்தல் வாக்குறுதியாக ரூ.10 ஆயிரம் அறிவித்ததுதான் ‘சூப்பர் ஹிட்’ – சென்னை பிரச்சாரக் கூட்டத்தில் பழனிசாமி பெருமிதம்
admin - 0
‘தேர்தல் வாக்குறுதியாக ரூ.10 ஆயிரம் அறிவித்ததுதான் சூப்பர் ஹிட்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரி வித்தார். ‘மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் பழனிசாமி சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
இதில் நேற்று, சென்னை வானகரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசிய தாவது: நான், ஒவ்வொரு குடும்பத்துக்கும் உதவித்தொகை ரூ.10 ஆயிரம் கொடுக்கப்படும் என்று அறிவித்தேன்.
இன்று அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது,...
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அமைச்சர் சேகர்பாபுவிடம் கோயில் பணியாளர்கள் வலியுறுத்தல்
admin - 0
தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு, கடந்த ஆண்டு அக்.11-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது, கோயில் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிடம் வலியுறுத்தினர்.
குறிப்பாக, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். கோயிலில் பணிபுரியும் தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்.
மாத ஓய்வூதியத் தொகையான ரூ.5 ஆயிரம் அடிப்படையாகக்...
சுகாதாரத் துறை மா.சுப்பிரமணியன். கடந்த 22-ம் தேதி காய்ச்சல் காரணமாக, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதியானார். அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்தனர்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், நேற்று காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
அவரது உடல்நிலையைப் பரிசோதனை...
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே புலி தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார்.
ஊட்டி அருகேயுள்ள சின்னகாடி மந்தையில் வசிக்கும், தோடர் இனத்தைச் சேர்ந்த புஸ்தால் குட்டன் (58) என்பவர் நேற்று முன்தினம் இரவு காடி மந்துக்குச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பாததால், பல இடங்களிலும் தேடினர்.
இந்நிலையில், நேற்று காலை காடிமந்து அருகேயுள்ள வனப் பகுதியில் அவரது உடல் கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அவரது உடலை மீட்டு,...
முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்த 72 வயது தாயை மீட்கக் கோரிய தத்து மகனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
admin - 0
திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வகணேஷ், மாயமான தனது 72 வயது தாயார் ஜெயலட்சுமியை மீட்க வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்தநீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஆர். பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மனுதாரர் குறிப்பிட்டுள்ள ஜெயலட்சுமி (72) திருமணம் ஆகாதவர். ஏராளமான சொத்துகள் உள்ளன. உதவிப் பேராசிரியராக பணிபுரிந்த அவர், செல்வ கணேஷை தத்தெடுத்துள்ளார். ஆனால், ஜெயலட்சுமியை மிரட்டி சில சொத்துகளை...
வேலூர் மாவட்டத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, மனு அளித்த 4 நாட்களில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மேலும், விதிமுறை களை மீறி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாக காவல் துறையினர் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் தவெக சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு பிப்.22-ம் தேதிதான் போலீஸார் அனுமதி...
எண்ணூரில் மக்களின் வசதிகளுக்காக ரூ.10 கோடியில் பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், நவீன நூலகம்
admin - 0
திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட எண்ணூரில் பொதுமக்களின் வசதிகளுக்காக ரூ.10 கோடியில் பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், நவீன அரசு நூலகம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட பேகம் 5-வது தெருவில், ரூ.1.10 கோடியில் 2,250 சதுரஅடி பரப்பளவு கொண்ட இறகு பந்து விளையாட்டு உள்ள ரங்க மைதானம், திருவல்லிக்கேணி ராஜாஜி நகரில் மாநகராட்சி சார்பில் ரூ.4.44...









