சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பெண் தொழில் முனைவோர் தயாரித்துள்ள பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
அண்ணா பல்கலைகழக மகளிர் மேம்பாட்டு மையம், சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் பெண் தொழில்முனைவோர் தயாரித்துள்ள பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடத்த உள்ளது.
பல்கலைக்கழகத்தின்...
சென்னையில் முக்கியமான வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக்குமார் கர்க் இன்று (மார்ச் 4) ஆய்வு செய்யவுள்ளார்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் (மேம்பால ரயில்) தடத்தை பரங்கிமலை வரை 5 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கும் வகையில், பறக்கும் ரயில் வழித்தட திட்டப்பணி, 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
ஆனால் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால்...
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி கட்டுமானத்துக்கு தடை: பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வழக்கு
admin - 0
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிமீ சுற்றளவுக்கு எந்த கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்ட தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்தவொரு கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது...
பிப்ரவரியில் கூடுதல் நேரம் பணியாற்றுவதால் முழு ஊதியம் வழங்குக: கவுரவ விரிவுரையாளர்கள் வேண்டுகோள்
admin - 0
போராட்ட நாட்களை பணி நாட்களாக ஈடுசெய்ய பிப்.26 முதல் தினமும் கூடுதலாக 2 முதல் 3 மணி நேரம் வரை பணியாற்றுவதால் பிப்ரவரி மாதத்துக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கவுரவ விரிவுரையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி யுஜிசி தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜி. சிவகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: சம வேலைக்கு சம ஊதியம்,...
ஈரான் – அமெரிக்க போரை நிறுத்த அமைதி முயற்சியை இந்தியா எடுக்க வேண்டும்: கம்யூ., விசிக வலியுறுத்தல்
admin - 0
ஈரான் - அமெரிக்க போரை நிறுத்த பிரிக்ஸ் நாடுகளுடன் சேர்ந்து அமைதிக்கான முயற்சியை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் விசிக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் போரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக தலைவர்...
வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
admin - 0
வளைகுடா நாடுகளில் போர் பரவியுள்ளதால் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஈரான் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி: ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலை கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் நம்...
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வருவதால், மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் 16 வருகை விமானங்களும், புறப்பாடு விமானங்கள் 12 என, மொத்தம் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
2-ம் நாளான நேற்று சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பஹ்ரைன், குவைத், மஸ்கட் உள்ளிட்ட 17...
தமிழகத்தில் ரூ.378 கோடியில் 8 அம்ரித் பாரத் நிலையங்கள் திறப்பு மற்றும் கடற்கரை - எழும்பூர் 4-வது பாதை நாட்டுக்கு அர்ப்பணிப்பு ஆகிய ரயில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார். இவற்றில், ரயில்வே துறையில் ரூ.378 கோடி மதிப்பில், மேம்படுத்தப்பட்ட 8 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை திறந்து வைத்தார். சென்னை எழும்பூர் -...
தமிழகத்தில் சென்னை, புதுக்கோட்டை, சிதம்பரத்தில் தலா ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றன. இவை தவிர அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட, தாலுகா, மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவப் பிரிவுகள் உள்ளன.
மொத்தம் 565 அரசு பல் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் 400-க்கும் மேற்பட்ட பல் மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந்தரம் செய்யப்படாததால்,...
வருவாய்த் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் அடையாள சான்று கட்டாயமாகும்.
இந்தச் சான்று இருந்தால் மட்டுமே கொள்முதல் நிலையங்களில் நெல்லை...










