Google search engine
அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் சங்க பொதுச் செயலாளர் பழனியப்பன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம்-2023-ல் தமிழக அரசு பல்வேறு திருத்தங்களை கடந்த ஜனவரி மாதம் கொண்டு வந்துள்ளது. அதில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் என்பது குறி்ப்பிட்ட காலத்துக்கு மட்டும் எனக்கூறி காலவரம்பு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும்...
தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், உரியநிதி வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை நேற்று தொடங்கிவைத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2-ம் தேதிபிரதமர் மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சியாகும். தற்போது...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நாளை (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 3 டிஐஜி.க்கள், 19 எஸ்.பி.க்கள், 61 டிஎஸ்பி.க்கள் உள்ளிட்ட 6,200-க்கும் மேற்பட்ட போலீஸார் பரமக்குடி உட்பட மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 150 சிசிடிவி...
விக்கிரவாண்டியில் செப்.23-ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில், விஜய்யின் கட்சியை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதற்கிடையே, கட்சியின்முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த விஜய் முனைப்பு காட்டி வருகிறார்....
சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்காக நிதியை மறுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ள நிலையில், அரசியல் லாபத்தை தள்ளிவைத்துவிட்டு தமிழக மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்சா அபியான்) கீழ், தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த,...
தமிழகத்தில் கனிமவளத் துறையில் பலகோடி ரூபாய்க்கு நிதி முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த மோசடியை தடுக்க மாநில அளவில் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என துறை அலுவலர்களே கோரிக்கை விடுத்துள்ளனர். கனிமவளத் துறையில் திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களைப் போல், மாநில அளவில் பல கோடி ரூபாய்க்கு நிதி முறைகேடு நடந்துள்ளதை தடுக்க சிறப்புக் குழு அமைப்பது குறித்து, இத்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில்...
அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்ல அரசின் தூதுவர்களாக பெண்கள் இருக்க வேண்டும்’ என அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார். தமிழக அரசு சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,874 கோடியில் வங்கிக்கடன் இணைப்புகள் வழங்குதல், 12,233 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உட்பட 22 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை யா.ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தலைமைவகித்தனர்.இவ்விழாவில் அரசின்...
தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் வளர்ச்சி, உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையம் அமைக்க அமெரிக்காவின் ‘ட்ரில்லியன்ட்’ நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அதிக அளவில் நிறுவனங்களை தொடங்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, சான் பிரான்சிஸ்கோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், நோக்கியா உள்ளிட்ட 6...
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களைத் தொடர்புபடுத்தி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக மதுரை சைபர் கிரைம் போலீஸார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா கரந்தலஜே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தனது கருத்துக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கோரியும் பிரமாணப்...
 தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை சமூகவலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ள முதல்வர் “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி. தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத்...