Google search engine
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குருப்-4 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு, ஜூன் 9-ம் தேதி காலை நடைபெற உள்ளது. விண்ணப்பதார்களின் அனுமதிச் சீட்டுகள் (ஹால்டிக்கெட்) www.tnpscgov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
பிறவியிலேயே உதடு அண்ணப்பிளவு, முகத் தாடை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க அகில பாரத மகிளா சேவா சமாஜத்துடன் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டசெய்திக் குறிப்பு: பிறவியிலேயே உதடு அண்ணப்பிளவு மற்றும் பிற முகதாடை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அறுவை உள்ளிட்ட சிகிச்சைகளை இலவசமாக வழங்க சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும்...
 சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் அறிவார்ந்த கருத்துகளால் என்னை செறிவூட்டியுள்ளனர் என ஓய்வுபெறும் நாளில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவு உபச்சார விழா, உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாழ்த்தி பேசும்போது, ‘‘பல ராஜ்ஜியங்களை வெற்றி...
பாலின சமத்துவம் மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் எல்லா நிலையிலும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று அமெரிக்க துணை தூதரக அதிகாரியும், செய்தி தொடர்பாளருமான சமந்தா ஜாக்சன் வலியுறுத்தினார். சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், தென்னிந்திய எக்ஸ்சேஞ்ச் விசிட்டர்ஸ் அலும்னி அசோசியேஷன், சுரானா அண்ட் சுரானா இன்டர்நேஷனல் அட்டர்னீஸ் நிறுவனம் ஆகியவை சார்பில், ‘அனைவரையும் உள்ளடக்கிய பத்திரிகை பணி சூழலை உருவாக்குவதில் செய்தி ஆசிரியரின் பங்கு’ என்ற தலைப்பில், சென்னையில்...
நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக எம்.டி.ஆர்.எஃப் அறக்கட்டளை - எம்பெட்யூஆர் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நீரிழிவு நோய் பாதிப்பால் உடலில் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கண்டறிய மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான ஆராய்ச்சியை சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்.டி.ஆர்.எஃப்) முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் இந்தியாவில் அதிகரித்துவரும் நீரிழிவு நோயின் பரவலை தடுக்கும் விதமாக சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையும், எம்பெட்யூஆர் நிறுவனமும்...
வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 1,460 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் 25, 26 தேதிகள் வார இறுதி நாட்கள்(சனி, ஞாயிறு - முகூர்த்த தினம்) என்பதால் சென்னையில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு அரசு...
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை உடனே தடுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே வட்ட வடா என்ற இடத்தில்கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணியை துரித கதியில் நிறைவேற்றி வருகிறது. முதல்கட்டமாக, ரூ. 2.5...
தமிழக மின்துறைக்கு 2012-16 காலகட்டத்தில் அதானி நிறுவனம் தரமற்ற நிலக்கரியை விநியோகித்ததாகவும், இதனால் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் வெளியான செய்தி, மீண்டும் கிளம்பும் அதே புகார் காரணமாக பேசுபொருளாக மாறியுள்ளது. அதிமுக ஆட்சியில் அதாவது 2012-16 காலகட்டத்தில், மின்வாரியத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு நந்துள்ளதாக சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்றில் செய்தி வெளியானது. குறிப்பாக, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 2014-ல் 15 லட்சம்...
மரக்காணம் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அசம்பாவிதங்களைத் தடுக்க 500-க்கும் மேற்பட்ட போலீஸார் மரக்காணத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மரக்காணம், தர்மாபுரி வீதியில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோயில். இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாத பஞ்சமி திதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். தொடர்ச்சியாக 22 நாட்களுக்கு மகாபாரதம் நிகழ்ச்சிகளை வலியுறுத்தும் வகையில் திருவிழா நடத்தப்படும். இந்த திருவிழா இப்பகுதி பொதுமக்களால் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஆண்டு கோயிலை...
தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 5,800 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது தெரிவித்துள்ளார். தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து முதல் குழுவாக சென்னை மாவட்டத்தில் இருந்து 150 பேர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற அல்...