Google search engine
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படி மாற்றியிருப்பது மத்திய அரசுக்கும், மாநில...
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 19-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, முன்னாள்...
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக திமுக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கள்ளக் குறிச்சி கள்ளச் சாராய மரணங்களுக்கு உரிய நீதிவேண்டியும், சிபிஐ விசாரணை கோரியும் தொடர்ந்து சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்துத்...
“தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி மீதான...
மத்திய அரசின் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 15 ஆயிரம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு ‘பி.எம். சூர்யகர் - முப்த் பிஜ்லி யோஜனா’ என்ற சூரிய வீடு இலவச மின்திட்டத்தை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார். ரூ.18 ஆயிரம் மானியம்: இத்திட்டத்தின்கீழ், வீடுகளில் ஒரு கிலோவாட் திறனில் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்க ரூ.30 ஆயிரம், 2...
ஏக​னாபுரம் ஊராட்சி துணைத் தலைவர் திவ்யா (35) நேற்று முன்​தினம் தற்கொலை செய்து கொண்​டார். பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு எதிராக இவர் 9 முறை தீர்​மானம் நிறைவேற்றியவர் என்பது குறிப்​பிட்​டத்​தக்​கது. சென்னை​யின் 2-வது விமான நிலையம் காஞ்​சிபுரம் அருகே​உள்ள பரந்​தூரில் அமைகிறது. இதற்காக பரந்​தூர் மற்றும் சுற்றி​யுள்ள 13 கிராமங்​களில் இருந்து 5,000 ஏக்கர் நிலங்கள் கையகப்​படுத்​தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழு​மையாக கையகப்​படுத்​தப்பட உள்ளன. இதனால்...
கிண்டி கலைஞர் மருத்துவமனையில் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 13-ம் தேதி விக்னேஷ் என்ற இளைஞர், புற்றுநோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் பாலாஜியை கழுத்து, தலை, நெற்றி என 7 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி, தீவிர சிகிச்சை பிரிவில்...
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 107-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப் படத்துக்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 107-வது பிறந்த நாளையொட்டி தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சத்தி​யமூர்த்தி...
சிங்கப்பெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், சிங்கபெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு இன்று (நவ.20) முதல் 23-ம் தேதி வரை முற்பகல் 11.40, நண்பகல் 12.20, 12.40, மதியம் 1.45,...
சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு பாலிஹோஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் விமானங்கள் மற்றும் ஜேசிபி வாகனங்களுக்கு பயன்படுத்தும் ரப்பர் மற்றும் பைப் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம், கடந்த 2023-24-ம் நிதியாண்டில் தங்களது வருமானத்தை குறைத்து காட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்த வருமான வரித்துறை அதிகாரிகள், அந்நிறுவனம் வரிஏய்ப்பு செய்ததற்கான முகாந்திரம் இருந்ததைக் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து,...