Google search engine
அரும்​பாக்கம் ஜானகிராமன் காலனி​யில் குடி​யிருப்பு கட்டிடத்தை ஒட்டி சாலை​யில் பாலவிநாயகர் கோயில் நிறுவப்பட்​டுள்​ளது. இக்கோ​யில் அருகில் உள்ள வீடு ஒன்றில் விலங்​குகள் நல ஆர்வலர், நாய்​களுக்கு உணவளித்து வந்துள்ளார். இந்த நாய்​கள், அசைவ உணவை உண்டு​விட்டு, எலும்​புகளை விநாயகர் கோயி​லில் போட்டு அசுத்தம் செய்வதாக புகார் எழுந்தது. எனவே, நாய்களுக்கு இப்பகு​தி​யில் உணவளிப்பதை தவிர்க்​கு​மாறு பக்தர்கள் சார்​பில் விலங்​குகள் நல ஆர்வலரிடம் வேண்​டு​கோள் விடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், விநாயகர் கோயில் சாலையை...
விசிக​ தலைவர் திரு​மாவளவன் முகநூலில் பேசி​யது: கட்சி​யின் மறுசீரமைப்பு பணிகள் வேகமெடுத்​துள்ளன. ஒருங்​கிணைப்​புக் குழு​வில் நியமிக்​கப்​பட்ட அனைவரும் கட்டாயம் களத்​தில் இருக்க வேண்​டும். அவர்கள் ஒரு சார்பு அணுகு​முறையை கடைபிடிக்கக்கூடாது. மாவட்ட நிர்​வாகம் மட்டுமின்றி, மாநில பொறுப்புகள், துணை நிலை அமைப்பு​களின் பொறுப்பு​களுக்கான விண்​ணப்​பங்களை பெற வேண்​டும். பட்டியலினத்​தவர் அல்லாதவர், பெண்​கள், சிறு​பான்​மை​யினர், மாணவர்​கள், இளைஞர்கள் தரப்பினர் விண்ணப்​பிக்​காமல் இருந்​தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து, மாவட்ட நிர்​வாகி​களுக்கு தக்க அறிவுறுத்தல்...
ஜனவரி மாதம் முதல் 2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து பாஜக உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக உயர்மட்ட குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிர்...
கூடைப்பந்து வீராங்கனை எலினா இறப்புக்கு சிக்கன் ரைஸ் சாப்பிட்டது காரணமில்லை என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராபின் டென்னிஸ் என்பவரின் மகள் எலினா லாரெட் (15). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்து வந்தார். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கச் சென்ற அவர், ரயிலில்...
அதிமுக சார்பில் நவ.24-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற கட்சியினர் அனைவருக்கும் பொதுச்செயலாளர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களுக்கு அனைத்து வகைகளிலும் சேவை ஆற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எம்ஜிஆரால் `அதிமுக தோற்றுவிக்கப்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா தலைமையிலும், தொடர்ந்து நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களாகிய...
நீதிக்கட்சியின் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் தொடர்ந்து உழைப்பை செலுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த நீதிக்கட்சி கடந்த 1916 நவம்பர் 20-ம் தேதி தொடங்கப்பட்டது. அக்கட்சி உருவான தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனும் உரிமையை வழங்கி சமூக நீதி புரட்சி. இலவச...
தமிழக குற்ற வழக்கு தொடர்(வு)த்துறை இயக்குநராக உயர் நீதிமன்ற அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணராஜாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநராக பணியாற்றிய சித்ராதேவி விருப்ப ஓய்வில் சென்றார். அதையடுத்து அந்த இடத்தில் தற்காலிக பொறுப்பு இயக்குநராக மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரான அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இப்பதவிக்கு நிரந்தர இயக்குநரை நியமிக்க ஓய்வு பெற்ற உயர்...
புதுப்பிக்க எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. குறிப்பாக, நம்பகமான, திறமையான நகர்ப்புற போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதை நோக்கமாக கொண்டும் செயல்படுகிறது. புதுப்பிக்க எரிசக்தியை பெறும் வகையில், சூரியஒளி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது....
பூம்புகார், லெமூரியா கண்டம் குறித்து கடல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் வலியுறுத்தினார். தமிழியக்கம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தமிழியல் மற்றும் பண்பாட்டுப்புலம் சார்பில் சிந்து சமவெளி ஆய்வு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம் தொடங்கிவைத்தார். இதில் தமிழியக்கம் அமைப்பின் நிறுவனரும், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விஸ்வநாதன்...
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவதால், பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் ஒரே நாளில், புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூரு, திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் என...