கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வந்தவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் நீதி கேட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 18 அரசு மருத்துவமனைகள், 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் நேற்று...
கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்து சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள் இன்று (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ மாணவி ஒருவரை மாநகராட்சி தன்னார்வலரான சஞ்சோய் ராய் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை...
அரசு சாதனைகளை விளக்கி தமிழகம் முழுவதும் தெருமுனை பிரச்சாரம்: திருச்சி திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
admin - 0
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநகரக் கழக செயலாளர் மதிவாணன், மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, செந்தில், துணை மேயர் திவ்யா தனக்கோடி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு...
“பணக்காரர்களை மட்டுமே மனதில் வைத்து ரயில்வே கொள்கை வகுக்கும் மத்திய அரசு” – டி.ஆர்.பாலு சாடல்
admin - 0
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் துரோகம் செய்த ஒன்றிய அரசு, இன்றைக்கு ரயில்வே திட்டங்களிலும் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. இதயமே இல்லாமல் தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயைப் பிச்சை போட்டிருக்கிறார்கள் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“நாட்டின் 80 சதவிகித மக்களை மறந்துவிட்டு, பணக்காரர்களை மட்டுமே மனதில் வைத்து, ரயில்வே கொள்கை வகுத்து வருகிறது ஒன்றிய அரசு” என்று அவர் சாடியுள்ளர்.இது...
விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் 62-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையிலும், நாளை (சனிக்கிழமை) புதுச்சேரியிலும் விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளான ஆகஸ்ட் 17-ம் தேதியை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டும் அவரது 62-வது பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக, இன்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள...
கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டை ஒட்டி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடும் இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதல்வராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாகவும் என் நன்றியையும், தலைவர் கலைஞரின் கோடானு கோடி உடன்பிறப்புகளின் நன்றியையும் உங்களில் ஒருவனாக உரித்தாக்குகிறேன்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு: இந்தியாவின்...
சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை: முதல்வருக்கு வாரிசுகள் கூட்டமைப்பு கோரிக்கை
admin - 0
சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த கூட்டமைப்பின் தலைவர் நா.விஜயராகவன் அனுப்பி யுள்ள மனுவை, பரிசீலித்து நிறைவேற்றித் தரும்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் பரிந்து ரைத்துள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை...
அரசு உதவி வழக்கறிஞர் பணி தேர்வு முறையில் மாற்றம்: கட்டாய தமிழ் மொழி தாள் தேர்வு இடம்பெறுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
admin - 0
அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் (கிரேடு-2) தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. புதிய முறையில் முதல்நிலைத் தேர்வில் கூடுதலாக பொது அறிவுத் தாள் தேர்வும், மெயின் தேர்வில் கூடுதலாக கட்டாய தமிழ் மொழி தாள் தேர்வும் இடம்பெறுகின்றன.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பொதுப்பணியில் உள்ள அரசு உதவி வழக்கறிஞர் (கிரேடு-2) பதவிக்கான புதிய தேர்வு திட்டம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளதாக...
தொடக்க கல்வித் துறையில் பணியாளர் நிர்ணயம்: சரண் செய்த பணியிடங்களை பதிவு செய்யக்கூடாது என உத்தரவு
admin - 0
அரசுப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயத்தின்போது சரண் செய்யப்பட்ட பணியிடங்களை மீண்டும் பதிவு செய்யக்கூடாது என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: நடப்பு கல்வியாண்டில் (2024-25) கடந்த ஆகஸ்ட்1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில்உள்ள மாணவர் எண்ணிக்கைக்கேற்ப இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி,...
தமிழகத்தில் உள்ள 25 ஆயிரம் தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த, மென்பொருள் உருவாக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் உயர் அழுத்தப் பிரிவில் இடம்பெறும் 11 ஆயிரம் தொழிற்சாலைகளில் மட்டும் ஆளில்லாமல் கணக்கெடுக்கும் தானியங்கி மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மீட்டரில் மாதந்தோறும் கணக்கெடுக்கும் தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொலைத் தொடர்பு வசதியுடன் அலுவலக சர்வரில் இணைக்கப்பட்டுள்ளது. மின்கணக்கெடுப்பு தேதி வந்ததும் தானாகவே...










