Google search engine
அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் 3 முறை எழுதியும் தேர்ச்சி பெறாத, 50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கான உச்ச வயது வரம்பில்10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு பெரும் மாற்றுத்திறனாளிகளில் பெரும்பாலானவர்கள் 40 வயது ஆன நிலையில் பணியில் சேர்வதால், பணிவரன் முறை மற்றும் பதவிஉயர்வுக்காக,...
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆக.24, 25-ம் தேதிகளில் நடைபெறுகிறது. ஆன்மிக உரை, கண்காட்சி, கலை நிகழ்ச்சியுடன் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம், பழநியில் வரும் ஆக.24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. முதல் நாளில் மாநாட்டு கொடியை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றி வைக்கிறார். சிறப்புக் கண்காட்சியை அமைச்சர்...
தமிழகத்தில் பல இடங்களில் வக்பு வாரிய சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டு, ரூ.2,000 கோடி கைமாறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், வடசென்னை தென்கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அதிமுக தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:போதைப் பொருள் கடத்தல் உட்பட...
“சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 22-ம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்படுகிறது. சென்னை '385' வயதை எட்டியிருக்கும் சூழலில் பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த...
சென்னையில் காலமான இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பதவி வகித்தவர் சுந்தரராஜன் பத்மநாபன்(83). இந்திய ராணுவத்தில் 43 ஆண்டுகள் பணியாற்றிய அவர் கடந்த 2002 டிச.31-ம் தேதி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் சென்னை, அடையாறில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு...
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் தேவநாதன் யாதவின் 5 வங்கி கணக்குகளை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் முடக்கி உள்ளனர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்புத் தொகை உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் சுமார்...
மருத்துவக் கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)செயலாளர் னிவாஸ், அனைத்துமருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய சமூகநலத் துறை மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர்கள் சார்பில் சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணைய தலைவருக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், மருத்துவக் கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் புழக்கமில்லா இந்தியா திட்டத்தின் கீழ்...
தேவையில்லாமல் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படும் நபர்களுக்கு போலீஸார் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடலாமா என அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்படும் ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, குண்டர்...
மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு கடந்த 53 ஆண்டுகளாக லாரி தண்ணீர்தான் விநியோகம் செய்யப்படுகிறது. லட்சக் கணக்கான மக்கள் வசிக்கும் மதுரை ஊருக்கே அன்றாடம் குழாய்களில் தடையின்றி குடிநீர் வழங்கும் மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக மதுரை உருவாக்கப்பட்டது. 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், கல்வி, சாலை...
சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த இந்தியக் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ஜெனரல் ராகேஷ் பால் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்த விழாவை ஒருங்கிணைக்கும் பணிக்காக இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ஜெனரல் ராகேஷ் பால் (59)...