ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு `ஈட் ரைட் கேம்பஸ்’ சான்றிதழ்: உணவு பாதுகாப்பு துறை வழங்கியது
admin - 0
நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுவதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ‘ஈட் ரைட் கேம்பஸ்’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது.
சென்னையில் உள்ள முதன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தினந்தோறும் சராசரியாக 12,000 வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.
அதேபோல் 3,500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கும் வகையில் படுக்கை வசதிகளும் உள்ளன. உள்நோயாளிகளாக தங்குவோருக்கு ஏற்ற உணவுகளும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அளிக்கப்படுகின்றன.
அந்த...
சில்லறை வணிக பொருட்களை ஆன்லைனில் விற்க கூடாது: சட்டம் இயற்ற வலியுறுத்தி திமுக வர்த்தகர் அணி தீர்மானம்
admin - 0
ஆன்லைன் வர்த்தகத்தில் சில்லறை வணிகப்பொருட்களை விற்பதை தடைசெய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுக வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள், திமுக வளர்ச்சி தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48 வது பிறந்த...
சென்னை வேளச்சேரி ஏரி பகுதியில் 955 வீடுகளை அகற்ற கணக்கெடுக்கும் பணி தீவிரம்: பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்
admin - 0
சென்னை வேளச்சேரி ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு எனக்கூறி 955 வீடுகளை அகற்ற கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதை கண்டித்து அப்பகுதி பெண்கள் குடும்பத்துடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள முக்கியமான ஏரிகளில் ஒன்றான வேளச்சேரி ஏரி மோசமான நிலையில் உள்ளதால், அதன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலையை மேம்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வேளச்சேரி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஜெகநாதபுரம், சசிநகர், லட்சுமிநகரில் அமைந்துள்ள 955...
கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை வந்துள்ள ‘ஐஎன்எஸ் டெல்லி’ போர்க் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு
admin - 0
கடற்படை தினத்தை முன்னிட்டு, சென்னைக்கு வந்துள்ள ‘ஐஎன்எஸ் டெல்லி’ என்ற போர்க் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் டிச.4-ம் தேதியன்று இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியக் கடற்படை சார்பில், கடற்படை தின கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ‘ஐஎன்எஸ் டெல்லி’ என்ற பிரம்மாண்ட போர்க் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
இக்கப்பலுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அலுவலகம் சார்பில் உற்சாக வரவேற்பு...
சென்னை விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற ஆந்திரா நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
சென்னையில் இருந்து எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடிஸ் அபாபா செல்லும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை புறப்பட தயாராகி கொண்டிருந்தது. பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.
அப்போது, விமானத்தில் பயணம் செய்ய வந்த ஆந்திர மாநிலத்தை ராமச்சந்திரா (35)...
மயிலாப்பூர் கோயில் நிதியில் நடத்தப்படும் கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க கோரும் அறிவிப்பாணையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
admin - 0
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் நடத்தப்படும் கலை, அறிவியல் கல்லூரி காலிப்பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பி்க்க வேண்டும் என்ற அறிவி்ப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுகைல் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், ‘‘மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறநிலையத்துறை சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரிக்கு உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்,...
ஐயப்பன் குறித்து சர்ச்சை பாடல்: பா.ரஞ்சித்தின் அமைப்பை தடை செய்ய கோரும் இந்து மக்கள் கட்சி
admin - 0
சபரிமலை ஐயப்பன் சுவாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடலை பாடியதாக கானா பாடகி இசைவாணி மற்றும் நிகழ்ச்சியை நடத்திய நீலம் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள் கட்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மகளிர் அணி மாநில தலைவர் சுசிலா தேவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பலகோடி மக்களின் உணர்வுகளோடு...
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு: கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 130 கல்லூரிகளில் இன்று (நவ.26) நடைபெறவிருந்து பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது...
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: டெல்டா மாவட்ட மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – அரசு அறிக்கை
admin - 0
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் அரசு மேற்கொண்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகைக்கு தெற்கு, தென் கிழக்கில் 630 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கில் 830 கிமீ...
இந்த நிதியாண்டுக்குள் அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி திறனை 12 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்வாரியத்துக்கு வடசென்னை, மேட்டூர் மற்றும் தூத்துக்குடியில் 4,320 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சராசரி மின்னுற்பத்தி திறன் 67.14 சதவீதமாக உள்ளது. இதை 85 சதவீதமாக உயர்த்த மத்திய மின் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த உற்பத்தி திறன் இலக்கை எட்ட முடியாத நிலை...










