Google search engine
தேனி நர்சிங் மாணவி ஒருவர், தன்னை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து திண்டுக்கல், தேனி மாவட்ட போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், திண்டுக்கல் எஸ்.பி. அ.பிரதீப் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தனியார் செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் தனது வீட்டிலிருந்து கல்லூரி செல்வதற்காக பேருந்து மூலம்...
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மழைக்காலம் வருவதால் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 9 அரசு பள்ளிகளில் படிக்கும் 1,480 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சின்ன போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைக்கிள்களை...
தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை தொடங்கப்பட்ட கடந்த16 ஆண்டுகளில் மூளைச்சாவு அடைந்த சுமார் 2 ஆயிரம் பேரிடம்இருந்து இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் என மொத்தம் 11,411 உறுப்புகள் தானமாக பெற்று பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உறுப்பு தான தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில், உறுப்பு மாற்று விழிப்புணர்வு கையேடு, ‘மறுபிறவி’ என்ற உறுப்புதான விழிப்புணர்வு குறுந்தகடு ஆகியவற்றை சுகாதாரத் துறை அமைச்சர்...
ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டி, அந்த நாடுகளைச் சேர்ந்த தோழிகள் 2 பேர், தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஷெனியா(27), உக்ரைனைச் சேர்ந்தவர் இலியானா(29). இவர்கள் இருவரும், இரு நாடுகளிடையே போர் தொடங்குவதற்கு முன்பிருந்தே தோழிகளாக உள்ளனர். அண்மையில் இந்தியா வந்த இருவரும், இரு நாடுகளிடையே போர் நிறுத்தம், அமைதி வேண்டி தமிழக கோயில்களில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த...
கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட சுகாதாரஅலுவலர் முரளி சங்கர் உத்தரவின் பேரில், தமிழக - கேரள எல்லையான ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவ அலுவலர் ஆனந்தகுமார் கூறும்போது, “தமிழகத்துக்கு வந்த...
டெல்லி முதல்வராக ஆதிஷி மர்லேனா சிங் நேற்று முறைப்படி பொறுப்பேற்றார். அவர். முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்டு, அருகில் வேறொரு நாற்காலியில் அவர் அமர்ந்தார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில்இருந்த அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். கடந்த 17-ம் தேதிஅவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குபதிலாக கடந்த 21-ம் தேதி டெல்லியின் புதிய முதல்வராக ஆதிஷி மர்லேனா...
உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் இன்று (செப்.24) பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அமைச்சரவை மாற்றம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்தார்.வெளிநாட்டு முதலீடுகள் குறித்து எதிர்க்கட்சிகள்...
பெண்கள் மீதான வன்முறைகளைக் களைய, பாலின சமத்துவத்தை பள்ளியில் இருந்தே தொடங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறினார். மனித உரிமைப் போராளி பி.வி.பக்தவச்சலம் அறக்கட்டளை, டாக்டர் கோபிகர் அறக்கட்டளை, இந்திய ஹோமியோபதி மருத்துவக் குழுமம், சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் ஹோமியோபதி ஆகியவை சார்பில், மனித உரிமைப் போராளி பி.வி.பக்தவச்சலத்தின் 17-ம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் "பெண்கள் மீதானதொடர் வன்முறை - வேரும்...
தமிழகத்தில் அண்மைக்காலமாக என்கவுன்ட்டர் அதிகரித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில். ‘கந்து வட்டிஒழிப்பு’ மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இங்குள்ள மக்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும், நிதி பற்றாக்குறைக்காகவும் சில தனியார்நிறுவனங்களிடம் கடன் பெறுகின்றனர்....
உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தும் வகையில், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை பெற, இந்திய தேர்தல் ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளித்து மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்பிரிக்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து,மாற்ற மாவட்டங்களில் உள்ள ஊரகஉள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த ஊரகஉள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம், இந்தாண்டு...