பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: வரும் ஜன. 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே, மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினர் விடுமுறையை கருத்தில் கொண்டு ஜன.10-ம் தேதி முதலே புறப்படத் தயாராவர்.
அரசு பேருந்துகளை பொறுத்தவரை வழக்கமாக ஒரு மாதத்துக்கு முன்பு தான் இருக்கையை முன்பதிவு செய்ய முடியும்....
பொதுமக்களின் வசதிக்காக, வீடுகளில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான மேற்கூரைகள் அமைக்கும் நிறுவனங்களை பதிவு செய்யுமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் வீடு, நிறுவனங்கள் போன்றவற்றில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான மேற்கூரைகள் அமைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மத்திய அரசு சூரியசக்தி இலவச மின்திட்டத்தின் கீழ் வீடுகளில் ஒரு கிலோ வாட் திறனில் சூரியசக்தி மேற்கூரைகள் அமைக்க ரூ.30 ஆயிரமும், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரமும் மானியம் வழங்குகிறது. அதற்கு மேல்...
10 ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே அங்கீகார தேர்தல்: ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்கங்கள் இடையே கடும் போட்டி
admin - 0
ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்க நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில்வேயில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும். 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) 43...
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் அதிக அளவில் இடம் பெற்று தனியார் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆண்டுதோறும் காலி பணியிடங்களை முறையாக நிரப்பாததால் அரசு மருத்துவர்கள் பின்தங்கியுள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது.
தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல்கள் https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு...
மத்திய அரசின் 16-வது நிதி ஆணைய குழுவினர் சென்னை வந்த நிலையில், அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். மேலும் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் குழுவினர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கிறது.
மத்திய அரசு 16-வது நிதி ஆணையத்தை அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைத்துள்ளது. ஆணையத்தின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காந்தி கோஷ் ஆகியோர்...
மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகள் தள்ளாட்டத்தில் உள்ளன. இதனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காமல் சாமானியர்கள் சாபம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் இந்த மருத்துவமனைகளில் சுமார் 20 ஆயிரம் மருத்துவர் பணியிடங்கள் மட்டுமே...
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 2,000 கனஅடியாக குறைப்பு
admin - 0
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 7,084 கன அடியாக நீர்வரத்து, நேற்று 9,154 கன அடியாக அதிகரித்தது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணையில் இருந்து டெல்டா...
விவசாயிகளுக்கு திமுக அரசு எந்த நன்மையும் செய்யவில்லை, என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த எம்.காளிப்பட்டியில், மேட்டூர் அணை உபரி நீரைக் கொண்டு 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை கொண்டு கொடுத்ததற்காக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமிக்கு, காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு, அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத்தின் பாராட்டு விழா...
விருதுநகர் மாவட்டத்தில் ‘மணக்கும் மல்லிகை’ சாகுபடி: சென்ட் ஆலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
admin - 0
விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் மதுரை மல்லிகை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ட் ஆலை அமைத்து மல்லிகைக்கு அதிக விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, கோவிலாங்குளம், கட்டங்குடி, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் மதுரை மல்லிகைப் பூ சாகுபடி செய்யப்படுகிறது. இவை, அருப்புக்கோட்டை, மதுரை சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
மாவட்டத்தில்...
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4-ம் குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கை எண்.504-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 தான் குறைத்தது. டீசல் விலையை குறைக்க வேயில்லை.
இந்தச் சூழ்நிலையில், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களால்...










