சென்னை: தமிழர்கள் செழித்து வாழ்ந்திட உழைப்போம், உறுதி ஏற்போம். எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
காரிருள் சூழ்ந்து காட்டாட்சி நடைபெற்ற நேரத்தில், தமிழக மக்களை மீட்டெடுக்கத் தோன்றிய நம்பிக்கை நட்சத்திரமாக எம்.ஜி.ஆரால்...
சென்னை: சென்னையில் இன்று (அக்.16) அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை அர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடக்கலாம் என்றாலும்கூட அதன் காற்றுக் குவிப்பு மேல் நோக்கி நகர்ந்ததால் சென்னைக்கு இன்று (அக்.16) அதி கனமழை பெய்ய வாய்ப்பில்லை. இது சென்னை மக்களுக்கு ஒரு...
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று (அக்.16)வழக்கம்போல இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையின் தாக்கத்தை பொறுத்து, மின்சார ரயில் சேவையில் மாற்றம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், பறக்கும் ரயில் மார்க்கத்தில் வழக்கம்போல ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று கனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மாநகர பேருந்து...
தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் தேமுதிக அலுவலகத்தில் தங்க அழைப்பு: மக்களுக்கு உதவ தொண்டர்களுக்கு தலைவர்கள் அறிவுறுத்தல்
admin - 0
சென்னை: சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் தேமுதிக அலுவலகத்தில் தங்குவதற்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தங்களது தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ளது....
கிருஷ்ணகிரி/ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் மாணவ, மாணவிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பாரூரில் 34.6, நெடுங்கல்லில் 26 மிமீ மழை பதிவானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய, விடியப் பெய்த மிதமான மழை காலை 7.15 மணி வரை நீடித்தது.
தொடர்ந்து, சாரல்...
சென்னையில் 8 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடல்: 51 சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன
admin - 0
சென்னை: சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்ததால், 8 சுரங்கப்பாதைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன. சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போக்குவரத்து போலீஸார் நேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
முதல் கட்டமாக மழைநீர் சூழ்ந்ததால் பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம், சூரப்பட்டு அண்டர்...
சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் பல இடங்களில் சாரல் மழை மட்டுமே காணப்பட்ட நிலையில் சேலம், ஏற்காடு உள்பட சில இடங்களில் கனமழை கொட்டியது.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக ஓமலூரில் 18 மிமீ, சங்ககிரியில் 16.1 மிமீ, தலைவாசலில் 15 மிமீ, மழை...
சென்னை: தென்மேற்கு பருவமழை இன்று (அக்.15) இந்திய பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் துவங்கியுள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு - வடமேற்கு திசையில்...
சென்னை: “ஒருநாள் மழைக்கே சென்னை மாநகர் மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுவதுமாக முடக்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை அரசு எவ்வாறு பாதுகாக்கிற போகிறது?” என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளபக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (திங்கள்கிழமை) இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் மாநகர் முழுவதுமே வெள்ளக்காடாக...
சென்னை: தமிழகத்தில் சூரியசக்தி மின்நிலையங்களின் நிறுவு திறன் 9,270 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், சூரியசக்தி மின் நிறுவு திறனில் தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. பெரிய நிறுவனங்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்கும், எஞ்சிய மின்சாரத்தை மின்வாரியத்துக்கும் விற்பனை செய்வதற்கு வேண்டி அதிக திறன் கொண்ட சூரியசக்தி மின்நிலையங்களை...










