Google search engine
சிட்டுக்​குருவிகளை பாது​காக்​கும் நோக்​கில் கூடுகள் தயாரித்து, மக்களுக்கு வழங்கி வரும் சென்னையை சேர்ந்த ‘கூடு​கள்’ அறக்​கட்​டளைக்கு ‘மனதின் குரல்’ நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பாராட்டு தெரி​வித்​தார். பிரதமர் நரேந்திர மோடி​யின் 116-வது ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில், சிட்டுக்​குருவி குறித்து அவர் பேசி​ய​தாவது: அனைத்து மொழிகள், கலாச்​சா​ரத்​தி​லும் சிட்டுக்​குருவி பற்றிய சம்பவங்​கள், கதைகள் உள்ளன. நகரங்​களில் தற்போது மிக அரிதாகவே சிட்டுக்​குருவிகாணப்​படு​கிறது. இந்த...
இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், மாதவரம் - சிறுசேரி சிப்​காட் வரையிலான 3-வது வழித்​தடத்​தில் ஒரு பகுதி​யாக, அயனாவரத்​தில் இருந்து பெரம்​பூர் நோக்கி "கல்​வ​ராயன்" இயந்​திரம் சுரங்கம் தோண்​டும் பணியில் ஈடுபட்​டுள்​ளது. இந்த இயந்​திரம், வரும் ஜனவரி இறுதி​யில் இலக்கை அடையும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 28 சுரங்க ரயில் நிலையங்கள் சென்னை​யில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், 116.1 கி.மீ....
அதானி மீது திமுக பாசத்தை பொழிவதாகவும், கவுதம் அதானியை முதல்வர் ஸ்டாலின் ரகசியமாகச் சந்தித்தது பேசியது ஏன்? என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் நண்பரும், முன்னணி தொழிலதிபருமான கவுதம் அதானி, ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேலாக லஞ்சம் கொடுத்து அமெரிக்காவில் முதலீடுகளை திருடியது அம்பலமாகிய நிலையில், அந்நாட்டு அரசு அதானி உள்ளிட்டோரை கைதுசெய்ய...
விரைவில் வெளியாக உள்ள ரயில்வேயின் புதிய கால அட்டவணையில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படும் அந்த்யோதயா ரயிலின் நேரத்தை அரைமணி நேரம் முன்னதாக மாற்றி அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புதிய கால அட்டவணை வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான புதிய கால அட்டவணை தள்ளிவைக்கப்பட்டு, வரும் ஜன.1-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தெற்கு ரயில்வே அதிகாரிகள் விரைவாக செய்து...
இந்திய விவசாயிகளின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த குழு பரிந்துரை செய்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2020-ம் ஆண்டு நவம்பர் 26 முதல் 13 மாதங்களாக டெல்லி உட்பட இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வந்த நிலையில், மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால்,...
கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி இறுதியில் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்லும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின்...
நவ.26, 27-ல் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (நவ.25) காலை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள பதிவில், “டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ.25) இரவு தொடங்கி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. 26. 27-ல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் பகுதிகள் 26,...
மின்சார ரயில்கள் ரத்து, நேரம் மாற்றம் காரணமாக பிராட்வே-செங்கல்பட்டு இடையே கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த இடங்களிலிருந்து கடற்கரைக்கு வரும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதுடன் 28 ரயில்கள் தற்காலிகமாக ரத்தும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,...
ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது டிஜிபி அலுவலகத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. பம்மல் இரட்டைப் பிள்ளையார் கோயில் அருகே கடந்த 15-ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி தாம்பரம் யாகூப், பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக பாஜக மாநில...
தென்னிந்தியாவில் முதல்முறையாக சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.18.18 கோடியில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல், தொழில்நுட்ப மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறி்த்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: குறு, சிறு, நடுத்தர தொழில் புரிபவர்களின் உற்பத்தி திறன் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், வளர்ந்து வரும் தொழில் பிரிவுக்குள் அவர்கள் நுழைய வகை செய்யவும், தமிழகத்தில் 5 இடங்களில் ரூ.100 கோடியில் மெகா கிளஸ்டர் திட்டம்...