மயிலாப்பூர் கோயில் நிதியில் நடத்தப்படும் கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க கோரும் அறிவிப்பாணையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
admin - 0
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் நடத்தப்படும் கலை, அறிவியல் கல்லூரி காலிப்பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பி்க்க வேண்டும் என்ற அறிவி்ப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுகைல் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், ‘‘மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறநிலையத்துறை சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரிக்கு உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்,...
ஐயப்பன் குறித்து சர்ச்சை பாடல்: பா.ரஞ்சித்தின் அமைப்பை தடை செய்ய கோரும் இந்து மக்கள் கட்சி
admin - 0
சபரிமலை ஐயப்பன் சுவாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடலை பாடியதாக கானா பாடகி இசைவாணி மற்றும் நிகழ்ச்சியை நடத்திய நீலம் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள் கட்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மகளிர் அணி மாநில தலைவர் சுசிலா தேவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பலகோடி மக்களின் உணர்வுகளோடு...
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு: கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 130 கல்லூரிகளில் இன்று (நவ.26) நடைபெறவிருந்து பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது...
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: டெல்டா மாவட்ட மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – அரசு அறிக்கை
admin - 0
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் அரசு மேற்கொண்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகைக்கு தெற்கு, தென் கிழக்கில் 630 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கில் 830 கிமீ...
இந்த நிதியாண்டுக்குள் அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி திறனை 12 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்வாரியத்துக்கு வடசென்னை, மேட்டூர் மற்றும் தூத்துக்குடியில் 4,320 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சராசரி மின்னுற்பத்தி திறன் 67.14 சதவீதமாக உள்ளது. இதை 85 சதவீதமாக உயர்த்த மத்திய மின் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த உற்பத்தி திறன் இலக்கை எட்ட முடியாத நிலை...
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி டிச.12-ல் தர்ணா போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வுகால பணப்பலன், மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும். அனைத்து துறையின் ஓய்வு பெற்றவர்களும் அகவிலைப்படி உயர்வு பெறும்போது, போக்குவரத்து துறையில் மட்டும் 9 ஆண்டுகளுக்கும் மேலாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்படுகிறது....
தேசிய மாணவர் படை தினத்தையொட்டி, சென்னையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய இளைஞர் அமைப்பாகிய தேசிய மாணவர் படை (என்சிசி) அமைப்பு 1948-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி உருவாக்கப்பட்டது.
அதன் 76-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினண்ட் ஜெனரல்...
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதால், தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில்...
முறையாக பணிபுரியாத வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நீக்கம்: வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுறுத்தல்
admin - 0
முறையாக பணிபுரியாத வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை நீக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் தலைமை...
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் கலந்துகொள்வதற்காக, டெல்லிக்கு புறப்பட்டு சென்ற திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது; நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, தமிழக பிரச்சினை, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி போன்றவற்றை தொடர்ந்து வலியுறுத்துவோம். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தில் இந்தியை திணித்துக் கொண்டு இருக்கிறது. பொங்கல் நாளில், சிஏ பவுண்டேஷன்...










