Google search engine
ஸ்ரீபெரும்​புதூர் அடுத்த இருங்​காட்​டுக்​கோட்டை சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில் செயல்​பட்டு வரும் ஹூண்​டாய் மொபிஸ் கார் உதிரி​பாகங்​கள் தயாரிப்பு தொழிற்​சாலை​யில் நேற்று ஏற்​பட்ட பயங்கர தீ விபத்​தில் பல கோடி மதிப்​பிலான உற்​பத்தி பொருட்​கள் எரிந்​த​தாக தகவல் வெளி​யாகி​உள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம், ஸ்ரீபெரும்​புதூர் அடுத்த இருங்​காட்​டுக்​கோட்டை சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில் ஹூண்டாய் மொபிஸ் என்ற நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. கார்​களுக்​கான டேஷ்​போர்​டு, ஏர்​பேக் தயாரிக்​கும் பிரி​வில் நேற்று திடீரென தீப்​பற்​றியது. அப்​பகு​தி​யில் சேமித்து வைக்​கப்​பட்​டிருந்த பிளாஸ்​டிக்,...
தமிழக அரசு 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கக்கூடாது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வில் தவெக அரசு மேல்முறையீடு செய்ய பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை...
தமிழக முதல்வர் விஜய் நாளை (திங்கள் கிழமை) திருச்சி கிழக்கு தொகுதிக்கு நன்றி தெரிவிக்க வரும் நிகழ்ச்சியில் கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழக முதல்வர் விஜய் கலந்துகொள்ளும்,...
“இப்போது அமைச்சர் பதவிக்கு எல்லோரும் ஓடுகிறார்கள். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், விஜய்யே வீடு தேடிவந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். இதுதான் உண்மை” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, “இந்த தேர்தலில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் விரும்பிய கூட்டணியை அமைத்தோம். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல், ஒரு மாயையை உருவாக்கி ஒரு சுனாமி போல...
திருப்பரங்குன்றத்தில் மூடப்பட்ட 3 மதுக்கடைகளில் காவல் நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் கடை நேற்று மீண்டும் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது. தவெக பிரமுகரின் பாரையொட்டி உள்ள இந்த டாஸ்மாக் கடை விதிமுறையை மீறி திறக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தவெக அரசு அமைந்தவுடன் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 அரசு மதுபானக் கடைகள் மூடப்படும் என தெரிவித்தார்....
‘அரசுப் பள்​ளி​களில் காலி​யாக​வுள்ள உடற்​கல்வி ஆசிரியர் பணி​யிடங்​கள் விரை​வில் நிரப்​பப்​படும்’ என்று பள்​ளிக்​கல்வி அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார். சென்னை சிந்​தா​திரிப்​பேட்​டை​யில் உள்ள தனக்​கோடி நடுநிலைப்​பள்​ளி​யில் 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான புதிய மாணவர் சேர்க்​கையை பள்​ளிக்​கல்வி அமைச்​சர் ராஜ்மோகன் நேற்று ஆய்வு செய்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நடப்பு கல்வியாண்​டில் இது​வரை அரசுப் பள்​ளி​களில் ஒரு லட்​சத்து 52 ஆயிரத்து 625 பேர் சேர்க்கை பெற்​றுள்​ளனர். புதி​தாக 4 லட்​சம்...
தமிழக அரசின் கைத்​தறி, கைவினைப்​ பொருட்​கள், துணிநூல் மற்​றும் காதித்​துறை​யின் செயலர் வி.அ​முதவல்லி வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பட்​டு​வளர்ப்​புத் துறை பணி​யிடங்​களுக்கு சிறப்பு விதி​முறை​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. அதன்​படி, பட்​டு​வளர்ப்பு உதவி இயக்​குநர் நேரடி நியமனத்​துக்கு எம்​எஸ்சி விவ​சா​யம் (பட்​டு ​வளர்ப்​பு) பட்​டம் கல்​வித் ​தகு​தி​யாக நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அதே​போல், பட்​டு​ வளர்ப்பு உதவி ஆய்​வாளர் பதவிக்​கான குறைந்​த​பட்ச கல்​வித்​தகுதி பிஎஸ்சி பட்​டு​ வளர்ப்பு பட்​டம் ஆகும். பட்​டு​ வளர்ப்பு இளநிலை ஆய்​வாளர்...
தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி, 4 முறை பிரதான எதிர்க்கட்சி என தமிழக அரசியலில் கோலோச்சிய அதிமுக-வை மெல்ல மெல்ல கரைத்துக் கொண்டிருக்கிறது புதிதாக முளைத்திருக்கும் இன்னொரு நடிகரின் கட்சியான தவெக. “கணிசமான அதிமுக தொண்டர்களும் தவெக-வில் இணையத் தயாராகி விட்டார்கள். இன்னும் 6 மாதத்தில் ஒட்டுமொத்த அதிமுக முக்கிய நிர்வாகிகளும் தவெக-வில் இணைவார்கள்” என்று அடித்துச் சொல்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. தேர்தலுக்கு முன்பே கூட்டணி...
சென்னை திரு​வல்​லிக்​கேணி பார்த்தசாரதி கோயி​லில் 47 ஆண்​டு​களாக கோயில் செயல் அலு​வலரே தக்​கா​ராக நியமிக்​கப்​பட்டு வரு​வ​தால், அரசு அதி​காரி​யாக உள்ள செயல் அலு​வலரை தக்​கா​ராக நியமிக்க கோரி, டி.ஆர்​.ரமேஷ் என்​பவர் சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​த​போது, செயல் அலு​வலர்​கள் கோயி​லின் மத நடவடிக்​கை​களில் ஈடு​படு​வ​தாக மனு​தா​ரர் தரப்​பில் குற்​றம்​சாட்​டப்​பட்​டது. மத நடவடிக்​கை​களில் தலை​யிட...
உல​கள​வில் ஒவ்​வொரு ஆண்​டும் 70 லட்​சம் பேர் புகை​யிலை​யால் உயி​ரிழக்​கின்​றனர், இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களை சந்​தித்த நுரை​யீரல் நிபுணர் மருத்​து​வர் நரசிம்​மன் கூறிய​தாவது: உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்​டு​தோறும் மே-31ம் தேதி அனுசரிக்​கப்​படு​கிறது. இந்த ஆண்டு இளைஞர்​களை புகை​யிலை மற்​றும் நிக்​கோட்​டின் பழக்​கத்​திலிருந்து பாது​காப்​போம் என்ற கருப்​பொருளில் விழிப்​புணர்​வு​களை ஏற்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. உலகள​வில் ஒவ்​வொரு ஆண்​டும் 70 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் புகை​யிலை நேரடி​யாக உட்​கொள்​வது மூல​மாக​வும், 16 லட்​சம் பேர்...