Google search engine
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆலங்​குடி​யில் குரு பகவான் சந்​நி​தி​யில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: தமிழக அரசு அறி​வித்த விவ​சாயக் கடன் தள்​ளு​படி அறி​விப்பு திருப்தி இல்லை என்​ப​தால் தமிழகம் முழு​வதும் விவ​சா​யிகள் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கிறார்​கள். எனவே, விவ​சா​யிகளின் கடன்​கள் முழு​வதை​யும் தள்​ளு​படி செய்ய வேண்​டும். கும்​பகோணத்​தில் போலீஸ் அதி​காரி​யின் கையை முறுக்கி ஆளுங்​கட்​சி​யினர் அராஜகம் செய்​துள்​ளனர். ஆட்​சிக்கு வந்து விட்​ட​தால் தவெக​வினர்...
தமிழக எல்லை மறு​வரையறை ஆணை​யத்​தின் ஆலோ​சனைக் கூட்​டம், மாநில தேர்​தல் ஆணைய அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. தமிழ்​நாடு மாநில தேர்​தல் ஆணை​யர் மற்​றும் எல்லை மறு​வரையறை ஆணைய தலை​வர் பா.ஜோதி நிர்​மலா​சாமி தலை​மை​யில் நடை​பெற்ற இக்​கூட்​டத்​தில், 11 மாவட்ட ஊராட்​சிகள், 40 ஊராட்சி ஒன்​றி​யங்​கள், 177 கிராம ஊராட்​சிகளில் தேர்ந்​தெடுக்​கப்பட வேண்​டிய உறுப்​பினர்​களின் எண்​ணிக்கை நிர்​ண​யம் செய்​தல், அதன் தொடர்​புடைய வார்டு எல்லை மறு​வரையறை செய்​தல் ஆகியவை குறித்து விவா​திக்​கப்​பட்​டது. இதைத்​தொடர்ந்து...
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் வளையல்காரத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன்(37). அதிமுகவில் தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளராக இருந்து வந்த இவர், அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளால் மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்குமுன் அவர் பதிவுசெய்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வெளியான நிலையில் மற்றொரு வீடியோ தற்போது பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: தவெக தலைவரும், முதல்வருமான விஜய்க்குத்தான் இந்தப் பதிவு....
“சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டனர். அதனால் தவெக அரசுக்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை” - மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் இந்தக் கருத்தால் திமுக முகாம் தகித்துக் கொண்டிருக்கிறது. தனது வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யை வைகோ வரவேற்று வழியனுப்பிய உற்சாகத்தைப் பார்த்ததுமே இவர் இனி நம் பக்கம் தங்கமாட்டார் என்ற முடிவுக்கு வந்துவிட்ட திமுக, அதற்காக கவலைப்படவும் இல்லை. ஆனால், துரை...
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தால் டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டார். அதேபோல் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே.சங்கர் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்து பின்னர் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்தி...
அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​களுக்கு தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட பென்​ஷன் திட்​டத்தை உடனே அமல்​படுத்​தும் வகை​யில் விதி​முறை​களை வெளி​யிட வேண்​டும் என்று அரசு கல்​லூரி ஆசிரியர் கழகம் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. இது தொடர்​பாக அரசு கல்​லூரி ஆசிரியர் கழக பொதுச்​செயலர் சோ.சுரேஷ் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் கடந்த 1.4.2003 முதல் செயல்​படுத்​தப்​பட்டு வந்த பங்​களிப்பு ஓய்​வூ​திய திட்​டத்​துக்கு எதி​ராக அரசு ஊழியர்​களும், ஆசிரியர்​களும் தொடர்ந்து போராடி வந்​தனர். இதன் விளை​வாக, கடந்த...
 தலை​மைச் செயல​கத்​தில் பணிபுரி​யும் மனிதவளத் துறை அரசுப் பணி​யாளர்​களுக்கு முக அடை​யாள பயோமெட்ரிக் வரு​கைப்​ப​திவு முறை அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்​தில் உள்ள தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர், அமைச்​சர்​களின் அலு​வல​கங்​கள் உள்​ளன. மேலும், நாமக்​கல் கவிஞர் மாளிகை கட்​டிடத்​தில் 54 துறை செயலர்​கள், பல்​வேறு நிலைகளில் உள்ள அதி​காரி​கள் என 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பணி​யாற்​றிவரு​கின்​றனர். இவர்​களுக்கு காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை அலு​வல்...
சென்​னையைச் சேர்ந்த 16 வயதான நிஷா சசிகு​மார், ‘எவரெஸ்ட் சிகரத்​தில் ஏறிய இளம்​பெண்’ என்ற சாதனையைப் படைத்​துள்​ளார். இதுகுறித்து, நிஷா சசிகு​மார் மற்​றும் தந்தை சசிகு​மார் சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நானும் என் மகள் நிஷா​வும் இணைந்து உலகத்​தில் உள்ள 7 கண்​டங்​களி​லும் உள்ள 7 உயர்ந்த சிகரங்​களை அடைய வேண்​டும் என்ற நோக்​கோடு பயணத்​தைத் தொடங்கி இருக்​கிறோம். மே 25-ம் தேதி உலகின் உயர்ந்த சிகர​மான எவரெஸ்டை அடைந்து...
 தனி​யார் கட்​டு​மான உரிமை​யாளர் மீதான குண்டர் தடுப்​புச்​சட்ட உத்​தரவை உயர் நீதி​மன்​றம் ரத்து செய்​த​தால் அவர் சிறை​யில் இருந்து விடுவிக்​கப்​பட்​டார். தேமு​திக பொருளாள​ரும், எம்​பி​யு​மான எல்​.கே.சுதீஷின் மனைவி பூர்​ணஜோ​திக்கு சொந்​த​மான நிலத்​தில் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களை கட்டி பூர்​ணஜோ​திக்கு வழங்க வேண்​டிய தொகையை தராமல் ஏமாற்​றிய​தாக​வும், ஒரே குடி​யிருப்பை ஒன்​றுக்கு மேற்​பட்​ட​வர்​களுக்கு மோசடி​யாக விற்​பனை செய்​த​தாக​வும் தனி​யார் கட்​டு​மான நிறுவன உரிமை​யாள​ரான சந்​தோஷ் சர்​மாவை குண்​டர் தடுப்​புச்​சட்​டத்​தின் கீழ் சிறை​யில் அடைத்து...
தஞ்சை கிழக்கு மாவட்ட அதி​முக வர்த்​தகர் அணி செய​லா​ளர் மகேந்​திரன் தற்​கொலையை சுட்​டிக்​காட்​டி, “தமிழகம் முழு​வதும் உள்ள அதி​முக தொண்​டர்​களை இனி​யும் மனவேதனை அடைய​வி​டாதீர்​கள். வருங்​கால இளைஞர்​களுக்கு வழி​விடுங்​கள்” என அதி​முக ஐடி விங் மாநிலச் செய​லா​ளர் ராஜ் சத்​யன் போட்ட பதிவு அதி​முக வட்​டாரத்​தில் பேசுபொருளாகி இருக்​கிறது. தனது பதி​வில், அதி​முக இரண்​டு​பட்டு நிற்க காரண​மானவர்​களை​யும் சாடி இருந்த ராஜ் சத்​யன், என்ன காரணத்​தி​னாலோ சில மணி நேரத்​திலேயே...