‘தவெக அழிவை யாராலும் தடுக்க முடியாது’ – தற்கொலை செய்த அதிமுக நிர்வாகியின் மற்றொரு வீடியோ

0
23

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் வளையல்காரத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன்(37). அதிமுகவில் தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளராக இருந்து வந்த இவர், அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளால் மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதற்குமுன் அவர் பதிவுசெய்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வெளியான நிலையில் மற்றொரு வீடியோ தற்போது பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

தவெக தலைவரும், முதல்வருமான விஜய்க்குத்தான் இந்தப் பதிவு. தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், 108 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்து விட்டு, மக்களிடம் முறையிட்டு மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துக் கொள்ளுங்கள். அதைவிடுத்து, அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, குதிரைபேரம் செய்து, நீங்கள் ஆட்சியை தக்க வைக்க முற்படுகிறீர்கள் என்று சொன்னால், இந்த மக்கள் மற்றும் இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இதற்கான விளைவை நீங்கள் சீக்கிரம் அனுபவிப்பீர்கள்.

மக்கள் மாற்றத்தை விரும்பித்தான் உங்களுக்கு வாய்ப்பு தந்தார்கள். ஆனால் திமுக, அதிமுக செய்யாத தில்லுமுல்லுகளை செய்து கொண்டிருக்கிறீர்கள். இது தொடர்ந்தால் தவெகவின் அழிவை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here