Google search engine
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வழங்கப்பட்ட 5 ஆயிரம் புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். இதையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், வாழ்த்து தெரிவிக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைக்கு பதிலாக புத்தகங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அந்தவகையில் சுமார் 5 ஆயிரம் புத்தகங்கள் பிறந்தநாளன்று அவருக்கு வழங்கப்பட்டன. அவை அனைத்தும் திமுக இளைஞரணியின் தலைமை அலுவலகமான...
வணிக பயன்பாட்டு வாடகைக்கான வரி விதிப்பில் வியாபாரிகளுக்கு பாதிப்பில்லை என விளக்கமளித்துள்ள தமிழக பாஜக, இதுகுறித்து மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருமான உச்ச வரம்பு ரூ.10 லட்சம் உடையவர்கள் வணிக பயன்பாட்டுக்கு கட்டிடங்களை வாடகைக்கு வழங்கியிருந்தால் 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என...
மக்கள் நல்வாழ்த்துறையில் உள்ள மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மருத்துவக் கல்லூரி வகுப்புகள் நாளை முதல் புறக்கணிக்கப்படும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் செந்தில், செயலர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகப்பேறு மரண தணிக்கை கூட்டத்தை, அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களை கொண்டு மட்டுமே நடத்த வேண்டும். அதேபோல் ஆய்வு கூட்டத்துக்கான புதிய வரைமுறையையும் வகுக்க வேண்டும். மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில்...
அதி கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கையின் எதிரொலியாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அது குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல். இதேபோல யூனியன்...
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்றும், நாளையும் (நவ.29, 30) மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். வங்​கக்​கடலில் நிலவும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல், காரைக்​கால் - மாமல்லபுரம் இடையே நாளை காலை கரையை கடக்​கக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது. இதன் காரண​மாக, செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், கடலூர் உள்ளிட்ட 6...
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள அக்கடிதத்தில், “மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம்...
ஏற்காடு மலை அமைந்​துள்ள சேர்​வ​ராயன் மலைத் தொடரில் கடந்த ஒரு மாதமாக கடும் பனிப்​பொழிவு நிலவி வருவ​தால், காபி செடிகளில் காய்கள் பழுப்பது தடைபட்​டுள்​ளது. இதனால் அறுவடை தாமத​மாவ​தால், விவசா​யிகள் கவலை​யடைந்​துள்ளனர். சேர்​வ​ராயன் மலைத்​தொடரில் அமைந்​துள்ள ஏற்காடு, தமிழகத்​தின் சிறந்த சுற்றுலாத் தலங்​களில் ஒன்றாகும். இந்த மலைத் தொடர் கடல் மட்டத்​திலிருந்து 4,000 முதல் 5,000 அடி உயரம் கொண்​டது. இதனால் ஏற்காடு உள்ளிட்ட பகுதி​களில் ஆண்டு முழு​வதும் இதமான...
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஆந்திரா செல்லும் ரயிலில், திருப்பூர் அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டு, அங்கிருந்து ரயில் புறப்பட்டு சென்றது. கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து, ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் செல்லும் சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் பின்பக்க மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் திடீரென புகை எழுந்தது. அதிக...
அவசர மகப்பேறு வசதியில்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் பார்க்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹுவிடம் அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர். ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் நிர்வாகிகள், சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், வட்டார மருத்துவ அலுவலர்களை...
புதுச்​சேரியைச் சேர்ந்த சி.செல்​வ​ராணி என்பவரது தந்தை இந்து ஆதிதிரா​விடர் வகுப்​பைச் சேர்ந்​தவர். அவரது தாயார் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர். செல்​வ​ராணி தேவால​யத்​தில் ஞானஸ்​நானம் பெற்​றவர். இந்நிலை​யில், புதுச்​சேரி மாநில அரசின் கிளார்க் பணியிடத்​துக்காக பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் எனக்​கூறி விண்​ணப்​பித்து தேர்ச்சி பெற்​றார். பின்னர் சாதிச் சான்​றிதழ் சரிபார்ப்​பின்​போது அவர் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர் என்பது கண்டறியப்​பட்​டது. இதையடுத்து அவர் தனக்கு தனது தந்தை​யின் இந்து மதத்​தின் அடிப்​படை​யில் பட்டியலின...