கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

0
29

புதுச்​சேரியைச் சேர்ந்த சி.செல்​வ​ராணி என்பவரது தந்தை இந்து ஆதிதிரா​விடர் வகுப்​பைச் சேர்ந்​தவர். அவரது தாயார் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர். செல்​வ​ராணி தேவால​யத்​தில் ஞானஸ்​நானம் பெற்​றவர்.

இந்நிலை​யில், புதுச்​சேரி மாநில அரசின் கிளார்க் பணியிடத்​துக்காக பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் எனக்​கூறி விண்​ணப்​பித்து தேர்ச்சி பெற்​றார். பின்னர் சாதிச் சான்​றிதழ் சரிபார்ப்​பின்​போது அவர் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர் என்பது கண்டறியப்​பட்​டது. இதையடுத்து அவர் தனக்கு தனது தந்தை​யின் இந்து மதத்​தின் அடிப்​படை​யில் பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் என சாதி சான்​றிதழ் வழங்​கும்படி கோரி​யுள்​ளார். அவரது விண்​ணப்​பத்தை அதிகாரிகள் நிராகரித்​தனர்.

இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இதில், இடஒதுக்​கீட்டு சலுகைகளைப் பெறு​வதற்காக மதம் மாறு​பவர்​களுக்கு இதுபோல சாதிச் சான்​றிதழ் வழங்க முடி​யாது எனக்​கூறி வழக்கை நீதி​மன்றம் தள்ளுபடி செய்​தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​
யீடு செய்திருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதிமன்ற நீதிப​திகள் பங்கஜ் மித்​தல், ஆர்.ம​காதேவன் அடங்கிய அமர்வு பிறப்​பித்​துள்ள உத்தரவு: ஒரு மதத்​தில் இருந்து மற்றொரு மதத்​துக்கு மாறுவது என்பது அதன் கொள்​கைகள் மற்றும் கோட்​பாடு​களால் உண்மையாக ஈர்க்​கப்​பட்​டிருக்க வேண்​டும். ஆனால் மதமாற்​றத்​தின் நோக்கம் இடஒதுக்​கீட்​டின் பலனைப் பெறு​வது​தானேயன்றி, பிற மதத்​தின் மீது உண்மையான நம்பிக்கை இல்லாமல் இருந்​தால், அதை ஒருபோதும் அனும​திக்க முடி​யாது.

இதுபோன்ற மறைமுக நோக்​கங்கள் இடஒதுக்​கீட்டு கொள்​கை​யையே கேலிக்​கூத்​தாக்​கி​விடும். மனுதாரர் கிறிஸ்துவ மதத்தை தீவிரமாக கடைபிடிக்​கும்​போது, அரசு வேலை​வாய்ப்​புக்காக இந்துவாக தன்னை அடையாளப்​படுத்த முற்​படுவதை ஏற்க முடி​யாது. மேலும் அது அரசி​யலமைப்பு சட்டத்​தையே மோசடி செய்​வதற்கு சமம். எனவே, இந்த வழக்​கில் சென்னை உயர் நீ​திமன்​றம் பிறப்பித்​துள்ள உத்​தரவை நாங்​களும் உறுதி செய்​கிறோம். இவ்​வாறு உத்தர​விட்டு வழக்கை தள்​ளுபடி செய்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here