Google search engine
ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மாவட்டத்தில் 240 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத் தின் கட்டுப்பாட்டில் உள்ள 782 ஏரிகளில் 48 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 505...
மாநிலக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேவையாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநிலக் கல்லூரி மாணவரான திருத்தணியைச் சேர்ந்த சுந்தரை, கடந்த அக்.4-ம் தேதியன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கினர். சுந்தரை அவர்களிடமிருந்து மீட்ட...
ஃபெஞ்சல் புயல் காரணமாக மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முழுமையாக ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக ஆகியன வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்வாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன்: டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன. பெரம்பலூர், அரியலூர்...
முதுநிலை மருத்துவ படிப்புகளில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் சேருவதற்காக போலி தூதரக சான்றிதழ் அளித்த 46 மருத்துவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இருக்கும் 2,294 இடங்கள், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நிரப்பப்படுகிறது. அவற்றில் 1,094 இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீதம்,...
தமிழ்​நாடு அஞ்சல் வட்டம் சார்​பில், சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்​கில் தபால்தலை சேகரிப்பை ஊக்கு​விக்​கும் வகையில் ஜன.29 முதல் பிப்​.1-ம் தேதி வரை மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நடைபெறுகிறது. பங்கேற்க விரும்​புவோர் டிச.9-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்கலாம். விண்​ணப்ப படிவங்கள் அனைத்து தபால்தலை சேகரிப்பு அலுவல​கங்​களில் கிடைக்​கும். மேலும், https://tamilnadupost.cept.gov.in என்ற இணைய​தளத்​தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்​து​ கொள்​ளலாம் என அஞ்​சல்​துறை தெரி​வித்​துள்ளது.
உணவுப் பொருட்கள் பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு போதைப் பொருட்களை கடத்திய ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்து சென்னை சிபிஐ நீதிமன்றத்தி்ல் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 26-ம்...
சபரிமலையில் ஏற்கெனவே பதிவு செய்த நேரத்தில் சென்றால், சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழக பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார். தேவையற்ற நெரிசலை தவிர்க்க, தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கி உள்ளார். அதன் விபரம்: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன வரிசைக்கான டிஜிட்டல் முன்பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு...
சென்னை கிண்​டி​யில் உள்ள தமிழ்​நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்​கழகத்​தில் நேற்று மாலை நடந்த நிகழ்​வில், அரசு மருத்​துவ​மனை​களில் ஒப்பந்த அடிப்​படை​யில் பணியாற்றி வந்த 1,200 செவிலியர்​களுக்கு நிரந்தர பணிக்கான ஆணை மற்றும் கரோனா காலத்​தில் பணி நீக்கம் செய்​யப்​பட்ட 963 செவிலியர்​களுக்கு ஒப்பந்த அடிப்​படையிலான பணிக்கான ஆணைகளை சுகா​தா​ரத்​துறை அமைச்சர் மா.சுப்​பிரமணியன் வழங்​கினார். தேசிய நலவாழ்வு குழும இயக்​குநர் அருண் தம்புராஜ், பொது சுகா​தாரம் மற்றும் நோய்த்​தடுப்பு மருந்​துத்​துறை...
அனைத்து மகளிர் சுயஉதவிக் குழு உறுப்​பினர்​களும் முதல்​வரின் காப்​பீட்டுத் திட்​டத்​தில் இணைந்து பயன்​பெறு​மாறு தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் அறிவுறுத்​தி​யுள்​ளது. முதல்​வரின் விரிவான மருத்​துவக் காப்​பீட்டுத் திட்டம் கடந்த 2009-ல் ‘கலைஞர்’ காப்​பீட்டுத் திட்டமாக தொடங்​கப்​பட்​டது. இப்போது ஜனவரி 2022 முதல் 2027 வரையிலான திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறு​வனம் மூலம் செயல்​படுத்​தப்​பட்டு வருகிறது. இதன்​மூலம் அனைத்து அங்கீகரிக்​கப்​பட்ட மருத்​துவ​மனை​களி​லும் பணிபுரி​யும் மருத்​துவக் காப்​பீட்டு ஒருங்​கிணைப்​பாளர்கள் மூலம், மருத்​துவக்...
சைபர் குற்​றங்களை தடுக்​கும் நடவடிக்கை​யின் ஒருபகு​தியாக புதிய செயலிகள உருவாக்கி விழிப்பு​ணர்வு ஏற்படுத்​தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்​டுள்​ளது. இதன்படி நம்பகத்​தன்​மையற்ற சீனா​வின் 'ட்ரூ காலர்' எனும் செயலிக்​குப் பதிலாக புதிய செயலியை அரசு உருவாக்கி​யுள்​ளது. இதன்​ மூலம் சைபர் குற்​றங்​களைக் கட்டுப்​படுத்து​வ​தில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாடு முழு​வதும் செல்​போன் மூலம் நடத்​தப்​படும் சைபர் தாக்​குதல்கள் கடுமையாக இருந்​தா​லும் பெரும்​பாலான குற்​றங்கள் காவல்​துறை​யின் கவனத்​துக்கு கூட...