சென்னை கொளத்தூர் தொகுதியில் நவ.4-ம் தேதி முதல் பகிர்ந்த பணியிடமான ‘முதல்வர் படைப்பகத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். சென்னை, அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் பகிர்ந்த பணியிடம் அமைக்கப்படுகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகளை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பெண்கள் கணினி கற்பதற்காக, அனிதா பெயரில்...
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் லோகோவை சென்னையில் வெளியிட்டுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களை இனவெறிக்கு தூண்டும் வகையில், இன பேதத்தைத் கல்விக்கூடங்களில் ஏற்படுத்தி மாணவர்களிடையே இனப் பிரிவினையை உண்டாக்கிடும் வகையில் பேசியுள்ளார். எனவே உதயநிதி...
சிறந்த நூல் ஆசிரியர்களை கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்: ப.சிதம்பரம் வேண்டுகோள்
admin - 0
சிறந்த நூல் ஆசிரியர்களை கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். எழுத்து அறக்கட்டளை மற்றும் கவிதா பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் சவுந்தரா கைலாசம் இலக்கிய பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர் ஆசு எழுதிய பஞ்சவர்ணம் நூலின் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், கவிதா பதிப்பகத்தின் உரிமையாளர் சேது. சொக்கலிங்கம் வரவேற்புரை வழங்கினார்....
தீபாவளி பண்டிகைக்கு பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப, மெட்ரோ ரயில்கள் அதிகபட்சமாக 3.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் தேவைக்கு ஏற்ப, மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுகின்றன. அந்த...
வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவையை செலுத்தி ரத்தை தவிர்க்கலாம்: சென்னை ஆட்சியர் அறிவுறுத்தல்
admin - 0
வீட்டு வசதி வாரிய கே.கே.நகர் கோட்டத்துக்கு உட்பட்ட திட்டப் பகுதிகளில் குடியிருப்பு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவைத் தொகைகளை செலுத்தி, ஒதுக்கீடு ரத்தாவதைத் தவிர்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், கே.கே.நகர் கோட்டத்துக்கு உட்பட்ட அரும்பாக்கம், கே.கே.நகர். மதுரவாயல், அசோக் நகர், எம்டிபி திட்டம், ராஜா அண்ணாமலைபுரம். விசாலாட்சி தோட்டம், மாந்தோப்பு காலனி, 144-ராமாபுரம், 16-வளசரவாக்கம்,...
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில் இன்று (அக்.29) முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்குகிறது. 14 மாதங்களுக்கு பிறகு ரயில்சேவை தொடங்குவதால், பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். தினசரி இருமார்க்கமாகவும் தலா 45 சேவைகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே தற்போது இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால்,...
விழுப்புரம் அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், 2026 தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்து அரசியல் கட்சியினர் தாங்கள் தெரிவித்து வருகின்றனர்.
சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு: புஸ்ஸி ஆனந்த் பற்றி அதிக விஷயங்கள் வருகின்றன. அவர், புதுச்சேரியில் உள்ள பாஜக தலைவருடனும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனும் நெருக்கமாக இருப்பதாக...
விஜய் கட்சிக் கொள்கை எங்களது கட்சிக் கொள்கைக்கு நேரெதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின. கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் விஜய் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி...
பிரிவினைவாதம், ஊழலை ஒழிக்க வேண்டும்; கூட்டணி சேருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு: தவெக மாநாட்டில் விஜய் அறிவிப்பு
admin - 0
பிரிவினைவாதம், ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு...
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக். 27-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 8 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, தக்கலை ஆகிய இடங்களில் 7 செ.மீ., நாகர்கோவில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை ஆகிய இடங்களில் 5 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர்,...










