வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் 79 புதிய திட்ட பணிகள் தொடக்கம்: நிறைவடைந்த 29 பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்
admin - 0
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் வீட்டுவசதி, நகராட்சி நிர்வாகம், எரிசக்தி, மருத்துவம், உள்துறை சார்பில் 2-ம் கட்டமாக ரூ.1,383 கோடியில் 79 புதிய திட்டப் பணிகள் தொடக்கம் மற்றும் 29 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி, வால்டாக்ஸ் சாலை தண்ணீர் தொட்டி தெருவில் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததுடன், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:...
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராக பணி வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பிரேமா தலைமை தாங்கினார். அப்போது, அரசு துணை சுகாதார நிலையத்தில் உடனடியாக பணி வழங்கக்கோரி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் போது சங்கத்தின்...
டெல்லியில் நடைபெற்ற ‘பிக்கி’ சர்வதேச கருத்தரங்கில், விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத் திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட 3,345 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.104.22...
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து குடியரசுத் தலைவர் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள நிலையில், மீண்டும் அந்த விவகாரத்தில் தலையிட முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கொலை வழக்கு ஒன்றில் கைதான ராதாகிருஷ்ணன் என்பவருக்கு நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ராதாகிருஷ்ணனின் கருணை மனுவை பரிசீலித்த குடியரசுத் தலைவர் அவருக்கு விதிக்கப்பட்ட...
மாநில திட்டக்குழுவின் அலுவல்சாரா துணைத் தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், உறுப்பினராக தலைமைச்செயலர் நா.முருகானந்தமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். துணைத்தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெரஞ்சன், முழு நேர உறுப்பினராக ஆர்.சீனிவாசன், கூடுதல் முழு நேர உறுப்பினராக எம்.விஜயபாஸ்கர், பகுதிநேர உறுப்பினர்களாக சுல்தான் அகமது இஸ்மாயில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, ஆயிரம் விளக்கு எம்எல்ஏ என்.எழிலன், மல்லிகா சீனிவாசன், ஜெ.அமலோற்பவநாதன், ஜி.சிவராமன்,...
புயல் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாமக நிறுவனர் ராமதாஸ்: சென்னையில் கடந்த ஆண்டு ‘மிக்ஜாம்’ புயலின்போது ரூ.6,000 இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், அவர்களை விட மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.2,000 மட்டுமே வழங்கப்படும்...
முல்லை பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்கான கட்டுமானப் பொருட்கள் கொண்டுசெல்ல கடந்த மே 7-ம் தேதி தமிழக அதிகாரிகள், கேரள நீர்வளத் துறையிடம் அனுமதி கேட்டனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட கேரள அதிகாரிகள், மராமத்து வேலைகள் மற்றும் வழக்கமான பணிகளுக்கு அனுமதி தரவில்லை.
இந்நிலையில், மராமத்துப் பணிகளுக்குத் தேவையான தளவாடப் பொருட்களை அணைப் பகுதிக்கு கொண்டு செல்ல உள்ளதாக நவ. 29-ம் தேதி கேரள வனத் துறைக்கு தகவல்...
தமிழக அரசை குறைகூறாமல் மத்திய அரசிடம் நிவாரணம் பெற அழுத்தம் தரவேண்டும்: பழனிசாமிக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
admin - 0
தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காமல், மத்திய அரசிடம் நிவாரண நிதியை அளிக்க பழனிசாமி அழுத்தம் தரவேண்டும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பெருமழையின்போது ஆளுங்கட்சிக்கு உதவியாக இல்லாவிட்டாலும், குறைகளை சுட்டிக்காட்டும் இடத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் வஞ்சக சூழ்ச்சியுடன் அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றன. சேலத்துக்கும், சென்னைக்கும் மட்டுமே அரசியல் செய்யும் பழனிசாமி, சாத்தனூர் அணை முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டதால்தான்...
ராம்கோ சூப்பர்கிரீட், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் சீர்மிகு பொறியாளர் விருது வழங்கும் விழா
admin - 0
கட்டுமானம், கட்டமைப்பில் சிறப்பான முறையிலும், தனித்துவத்துடனும் செயலாற்றி வரும் பொறியாளர்களை கவுரவிக்கும் வகையில் ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘சீர்மிகு பொறியாளர் விருது’, ‘வளர்மிகு பொறியாளர் விருது’, ‘திறன்மிகு பொறியாளர் விருது - 2024’ ஆகியவை வழங்கப்படவுள்ளன.
சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நாளை (டிச. 5) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள இந்நிகழ்வை ரினாகான் ஏ.ஏ.சி. ப்ளாக்ஸ், டாக்டர் எம்ஜிஆர்...
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய சுற்றுச்சூழலை பாதிக்காத புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக, வீடுகளில் மேற்கூரை அமைத்து சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
நாட்டில் காற்றாலை, சூரிய சக்தி மின்நிலையங்களை அமைக்க சாதகமான சூழல் நிலவும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த...










