விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் 1,562 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சிலை கரைப்பின் இறுதி நாளான நேற்று சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...
இடைத்​தேர்​தலில் ஆட்​சி​யாளர்​களுக்கு சரி​யான தண்​டனை வழங்க வேண்​டும் என எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். பூந்​தமல்லி நகர இளைஞரணி அமைப்​பாளர் முகமது ராஷிக் - மரி​யம் பாத்​திமா ஆகியோரின் திரு​மணம் வேலப்​பன்​சாவடி​யில் நேற்று நடை​பெற்​றது. எதிர்க்​கட்​சித் தலை​வரும், திமுக இளைஞரணி செய​லா​ள​ரு​மான உதயநிதி ஸ்டா​லின் திரு​மணத்தை நடத்தி வைத்து மண மக்​களை வாழ்த்​தி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: இஸ்​லாமியர்​களுக்​கும் திமுக​வுக்​கு​மான உறவு காயிதே மில்​லத் காலத்​தில் உரு​வானது. இந்த உறவு...
செங்​கல்​பட்டு மாவட்​டம், மதுராந்​தகம் சட்​டப்​பேரவை இடைத்​தேர்​தலில் தமிழக வெற்​றிக் கழக வேட்​பாள​ராக மரகதம் குமர​வேல் போட்​டி​யிடு​கிறார். இவரை ஆதரித்​து, அக்​கட்​சி​யினர் தலை​வரும் தமிழக முதல்​வரு​மான விஜய், வரும் 25-ம் தேதி அச்​சிறுப்​பாக்​கம் பகு​தி​யில் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட​வுள்​ள​தாக தெரி​கிறது. இதற்​காக, அச்​சிறுப்​பாக்​கம் தேசிய நெடுஞ்​சாலை அருகே உள்ள வஜ்ரகிரி மலை அடி​வாரத்​தில் மேடை அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இங்கு மேடை அமைப்பதற்காக, தரை சமப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....
கோவையில் மோசமான வானிலையால் அமைச்சர் வன்னியரசு வந்த விமானம் மதுரையில் தரை இறங்கியது. தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, சேலத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்வுக்காக நேற்று மதியம் சென்னையில் இருந்து கோவைக்கு தனியார் விமானத்தில் பயணிகளுடன் வந்தார். ஆனால் கோவையில் மோசமான வானிலை நிலவியதால் கோவை விமான நிலையத்தில் அவர் வந்த விமானம் தரை இறக்கப்படவில்லை. தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தல்படி, வானத்தில் வட்டமடித்தபடி இருந்தது.இதனால் பயணிகள்...
உள்​ளாட்சி அமைப்​பு​களுக்​கான நிதிப் பகிர்வு தொடர்​பான பரிந்​துரை டிசம்​பர் மாதத்​துக்​குள் தமிழக அரசிடம் சமர்ப்​பிக்​கப்​படும் என மாநில நிதி ஆணை​யத்​தின் தலை​வர் அலா​வுதீன் தெரி​வித்​துள்​ளார். தமிழக அரசின் 7-வது மாநில நிதி ஆணை​யம் மற்​றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறு​வனம் சார்​பில் உள்​ளாட்சி அமைப்​பு​களின் நிர்​வாகம் மற்​றும் நிதி நிலையை மேம்​படுத்​துதல் தொடர்​பான தேசிய அளவி​லான கருத்​தரங்​கம் அரும்​பாக்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. ஆணை​யத்​தின் தலை​வர் கே.அலா​வுதீன் தலை​மை​யில் நடந்த கருத்​தரங்​கில், நகராட்சி...
முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் (79), உடல்நலக் குறைவால் நேற்று சிவகங்கையில் காலமானார். சிவகங்கை அருகே ஏரியூரைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன். இவர் 1999 – 2004-ல் சிவகங்கை தொகுதி எம்.பி.யாக இருந்தார். 2004 – 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மேலும், 2013 - 2014-ல் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக பதவி...
கடந்த திமுக ஆட்​சி​யில், தனி​யார் பள்ளி​களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தர பணம் வசூலித்ததாக 177 பள்​ளிகளிடம் இருந்து புகார்​கள் பெறப்​பட்​டுள்​ள​தாக​வும், இதில் ரூ.100 கோடி வரை மோசடி நடந்துள்​ள​தாக​வும் போலீஸ் தரப்​பில் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்​சி​யாக, அப்​போதைய பள்​ளிக் கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தொடர்புடைய 9 இடங்களில் சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் 16-ம் தேதி சோதனை நடத்​தினர். 18-ம் தேதி (இன்​று) சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில்...
 ஒத்திவைக்கப்பட்ட திமுக முப்பெரும் விழா மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை (செப்டம்பர் 19) நடைபெறவுள்ளது. திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள், பெரியாரின் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கிய நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு முப்பெரும் விழாவை சென்னை அறிவாலயத்தில் செப்டம்பர் 15-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. முன்னோடிகளுக்கு விருது இதில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு...
திட்டங்கள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதால், தவெகவை ‘தள்ளிப்போடும் வெற்றிக் கழகம்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் பிறந்தநாள் நிகழ்வை செப்.17 முதல் அக்.17 வரை கொண்டாட இருக்கிறோம். இதற்காக ரத்த...
மூலவைகை உருவாகும் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை அதிகரித்துள்ளது. இப்பிரச்சினையை சரிசெய்ய கோரி வருசநாடு அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆண்டிபட்டி வட்டம் தங்கம்மாள்புரம் கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூலவைகை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆறு வறண்டதால் உறை கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்து...